உறுதிகொண்டபின் அக்கறை கொள்வீர்கள். Southern Pines, North Carolina, USA 62-06-10E 1. மிக்க நன்றி, சகோ. பார்க்கர். மாலை வணக்கம், நண்பர்களே. மறுபடியுமாக இன்றிரவு இங்குள்ளது நல்லது. நீங்கள் உட்கார்ந்து நான் பேசுவதைக் கேட்டு களைப்படைந்துவிட்டீர்களென்று எண்ணுகிறேன். எனக்கும் கூட களைப்பாயுள்ளது. உரக்க பிரசங்கித்ததன் விளைவாக என் தொண்டை கரகரப்பாயுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தேவன் எனக்கு மிகச் சிறந்த கூட்டம் ஒன்றைக் கொடுத்தார் என்று நான் சற்று முன்பு சகோ. பார்க்கரிடம் கூறினேன். இது ஒரு பெரிய கூட்டமாக இருக்கவில்லை, நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது மிகப்பெரிய கூட்டமல்ல. இந்த கூட்டத்துக்கு வருகை தந்தவர் அநேகர் அல்ல. ஆனால் அதன் தரத்தை எண்ணிப் பார்க்கும் போது, இது மிகவும் அற்புதமானது. விசுவாசம்? அடேயப்பா, என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்பது போல் காணப்படுகிறது! எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்னும் உணர்ச்சி பெறும் அத்தகைய கூட்டம் எனக்கு மிகவும் பிரியம். இதன் விளைவுகள் நிரந்தரமாயிருக்குமென்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அது வெளியரங்கமாகும். நான் மணிக்கணக்காக செய்த பிரசங்கத்தை உட்கார்ந்து கேட்கக்கூடிய உங்கள் அனைவருடைய பொறுமையை நான் மெச்சுகிறேன். மறுபடியும் அடுத்த இரவு நீங்கள் வருகின்றீர்கள். உங்களால் நிச்சயமாக அதிக தண்டனையை தாங்கிக் கொள்ள முடிகிறது. உங்களுக்கு நிறைய பொறுமை உள்ளது என்று எனக்குத் தெரிகிறது. 2 எனவே நாங்கள் - எங்கள் எல்லோர் சார்பிலும், உங்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் என்று கூற விரும்புகிறேன். சகோ. தாமஸக்கு - அவர்பால் நான் கொண்டுள்ள நல்லுணர்வை என்னால் விவரிக்க முடியாது. அவரை எனக்கு ஏற்கனவே தெரியுமென்று நினைத்திருந்தேன். அவரை நான் அறிந்துள்ள வேறொருவருடன் குழப்பிக்கொண்டேன். அவருடைய அருமையான மனைவியுடன் நான் கைகுலுக்க நேர்ந்தது. அவர் உண்மையிலேயே கிறிஸ்துவின் நல்ல ஊழியக்காரர். தேவனுக்குச் சித்தமானால், வாழ்க்கையில் அநேக முறை நாங்கள் சந்திப்போம் என்னும் உறுதியான நம்பிக்கை கொண்டவனாயிருக்கிறேன். நான் உங்களைப்போல் இந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்க நேரிட்டால், நான் செல்லும் சபை அவருடையதாயிருக்கும். அப்படிப்பட்ட மனிதன் எனக்கு மிகவும் பிரியம் (சகோ. பார்க்கர் சகோ. பிரான்ஹாம் கூறின பாராட்டுதலுக்காக அவருக்கு நன்றி செலுத்தி, அவர் மறுபடியும் வருவது ஜனங்களுக்குப் பிரியமா என்று கேட்கிறார் -ஆசி). நன்றி, மிக்க நன்றி. அது மிகவும் அருமையானது. நன்றி. சகோ. பார்க்கர். 3 நான் மிகவும்.... (சகோ. பார்க்கர் மறுபடியும் பேசுகிறார் - ஆசி). எல்லா செலவுகளுக்கும் பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் உதவியையும் நாங்கள் பாராட்டுகிறோம். இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்துவதென்றால் அதிக செலவாகின்றது. அதற்கான பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. அது மிகவும் அருமை! நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் - இங்கு நடந்த எல்லாவற்றிற்காகவும் கர்த்தர் இரட்சித்தார், சுகமளித்தார், எல்லாமே இங்கு நடைபெற்றது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம் - ஆனால் இந்த கூட்டம் முடிவடைந்து சரித்திரமாக ஆகிவிடுவது எங்களுக்கு வருத்தமாயுள்ளது. வரப்போகும் காலத்தில் அது மீண்டும் நடக்க வாய்ப்புண்டு. அப்பொழுது விளைவுகளை நாம் காண்போம். இந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பின சிறு வெகுமதிகளுக்காக உங்களுக்கு மறுபடியும் நன்றி கூற விரும்புகிறேன். அதை நான் வெகுவாக பாராட்டுகிறேன். 4 நாங்கள் தென் கரோலினாவிலுள்ள கொலம்பஸில் உள்ள சகோதரன் பிக்பீயை சந்திக்க இங்கிருந்து புறப்பட்டு செல்வோம். நாளை இரவும் செவ்வாய் இரவும் நாங்கள் சகோ. பிக்பீயுடன் கூட இருப்போம். அங்கிருந்து நாங்கள் மேற்கு கரைக்கு புறப்பட்டு செல்வோம். உங்களைக் கேட்க விரும்புகிறேன் - அங்கு கூட்டங்களை முடித்துக்கொண்டு, நான் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்கு செல்ல விரும்புகிறேன். தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமெனும் உங்கள் ஜெபத்தை நான் கோரலாமா? உங்களுக்கு மிக்க நன்றி. 5 நாங்கள் எல்லாவற்றிற்காகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அதை என் சார்பிலும், என் கூடாரத்திலிருந்து இங்கு வந்துள்ள மக்களின் சார்பிலும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இங்கு எங்கள் தர்மகர்த்தாக்களில் சிலரும், சில டீகன்மார்களும், என் நண்பர்களும் வந்துள்ளனர். எங்கள் சபையின் போதகர் இங்கிருக்கிறார். நான் சகோ. நெவிலைக் காணவே முடியவில்லை. அவர் அறிமுகப்படுத்தப்பட்டார் என்று நினைக்கிறேன், அவரை அறிமுகம் செய்து வைத்தார்களா? சகோ. நெவில்? நீங்கள் எங்கிருக்கிறீர்கள், சகோ. நார்மன்? உங்களை என்னால் காண முடியவில்லை. ஓ, என்னே! பெரிய உருவம் படைத்த அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஒரு நிமிடம் வாருங்கள்! இவர் உண்மையான தேவனுடைய ஊழியக்காரர் என்றறிவேன். இவர் சாயம் போட்ட கம்பளநூல் மெதோடிஸ்டாக இருந்து, பின்பு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். அவர் இப்பொழுது பரிசுத்த ஆவி மெதோடிஸ்டு. இது எங்கள் விலையேறப்பெற்ற போதகர். சகோ. நெவில், உங்களுடன் கைகுலுக்க விரும்புகிறேன். நான் அறிமுகப்படுத்தினேன்.... சகோதரனே , உங்களுக்கு நன்றி. எனக்கு சகோ. நெவிலையும், அவருடைய அழகிய மனைவியையும், அவர்களுக்கு திருமணமாவதற்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். அவரை நான் அறிந்த இத்தனை ஆண்டுகளில், அவர் சிறிதளவும் மாறவில்லை; அவர் தேவனில் சிறிது உயர சென்றிருக்கிறார் என்று மாத்திரமே. அவ்வளவுதான். அவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். போதகராகிய அவரை நாங்கள் நேசிக்கிறோம். அவர் அநேக ஆண்டுகளாக போதகராக பணியாற்றி வருகிறார். கர்த்தருக்குச் சித்தமானால், இயேசு வருமளவும் அவர் அதில் நிலைத்திருப்பாரென்று நம்புகிறோம். (சகோ. நெவில் ஜனங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறார் - ஆசி.) சகோ. நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் வனபோஜனத்துக்கு (picnic) செல்லும் போது, யாராகிலும் ஒருவர் ஒரு சிறு மரத்தை அங்கு நட்டிருந்தால், அது அங்குள்ளதா இல்லையாவென்றும் கூட உங்களுக்குத் தெரியாது. ஏனெனில் அது அங்கு நடப்பட்ட ஒன்று. ஆனால் ஒரு பழைய ஓக் மரம் அங்கு உறுதியாக இருப்பதை நீங்கள் அறிந்திருந்தால், அந்த மரத்தின் நிழலில் இளைப்பாற நீங்கள் தீர்மானம் செய்வீர்கள். அதுதான் சகோ. நெவில். அவர் அனுதினமும் அதே நிலையில் இருந்து செயலாற்றி வருகிறார். அதற்காக நான் மகிழ்வுறுகிறேன். 6 நம்மிடையே- இங்கு வேறொரு சகோதரன் இருக்கிறார்- எங்கள் சபையுடன் கூட்டாளி சபைகளாக பணியாற்றும் ஒரு சபைக்கு அவர் போதகராயிருக்கிறார். அவர் இங்கு வர விருப்பமில்லையென்றால், அவரை எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சகோ. ஜூனியர் ஜாக்சன். பரிசுத்த ஆவியினால் நிறைந்த வேறொரு மெதோடிஸ்டு, ஜூனியர் ஜாக்சன், எங்கே இருக் கிறீர்கள்? இதோ அவர் இங்கிருக்கிறார், சகோ. ஜாக்சன். உங்களுக்கு ஏதாவது கூற விருப்பமா? சரி. இங்குள்ள வேறொருவர் சகோ. பாமர், இங்குள்ள எங்கள் சகோதரரில் மற்றுமொருவர். சகோ. பாமர், சற்று எழுந்து நிற்பீர்களா? இவர் ஜார்ஜியாவிலுள்ள மாகனில் போதகராக இருக்கிறார். சகோ. ஃபிரட்சாத்மன் இங்கிருக்கிறார் என்றறிவேன். அவர் எங்கள் சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவர். ஃபிரட், எங்கே இருக்கிறீர்கள்? இங்கு எங்கோ - அவர் பின்னால் நின்றுகொண்டிருக்கிறார். 7 சகோ. பாங்க்ஸ் உட் - சகோ. பாங்க்ஸ், எங்கே இருக்கிறீர்கள்? இவரும் எங்கள் தர்மகர்த்தாக்களில் ஒருவர் - அங்கே இருப்பவர். உங்களுக்குத் தெரியுமா, சகோ. பாங்க்ஸ் ஒரு யேகோவா சாட்சியாயிருந்தவர். அவர் கூட்டத்துக்கு வந்திருந்தார். இளம்பிள்ளை வாதத்தினால் கால் ஊனமுற்றிருந்த டேவிட் என்னும் மகன் அவருக்குண்டு. நான் ஒரு கூடாரக் கூட்டத்தில் இருந்தேன், அவர் முதலில் கண்டது... அன்றிரவு டல்லாஸில், இல்லை ஹவுஸ்டனில், பரிசுத்த ஆவியானவர் ஒளி வடிவில் கீழே இறங்கிவந்து, அவர்கள் அந்த புகைப்படத்தை எடுத்தபோது, சகோ. உட் அங்கிருந்தார். அப்பொழுது அவரை எனக்குத் தெரியாது. அவர் வேண்டிய பணம் சேகரித்தார் (அவர் ஒரு கான்ட்ராக்டர்). அவர் அடுத்த கூட்டத்துக்கு வந்திருந்தார் (அங்கிருந்து நான் வெளிநாடு புறப்பட்டேன்) - அவர் தன்னுடன் கூட இளம்பிள்ளை வாதத்தினால் ஊனமுற்ற பையனை கூட்டி வந்திருந்தார். நாங்கள் அங்கிருந்த போது... நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் அங்கு நின்றுகொண்டிருந்தேன் (அது கூட்டத்திலுள்ள ஜனங்களின் மத்தியில் செல்லும். நான் அவரிடம் அதைக் குறித்து எல்லாவற்றையும் கூறி, அவரை எழுந்து நிற்கக் கூறினேன். 8 டேவிட், எங்கிருக்கிறாய்? இன்றிரவு அவன் வந்திருக்கிறானா? ஊனமுற்றிருந்த பையன். அதுதான் அவன். டேவிட், இளம்பிள்ளை வாதத்தினால் கால் வளைந்துபோன ஒருவனை தேவன் சுகமாக்க வல்லவர் என்று ஜனங்கள் விசுவாசிக்காமல் போனால், நீ ஒரு நிமிடம் நடந்து, உன்னால் நடந்து காட்டமுடியும் என்பதை அவர்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இது நீ வேடிக்கை காட்டுவதற்காக அல்ல, ஒரு சாட்சிக்காக மாத்திரமே. பாருங்கள்? அவன் சிறிதுகூட நொண்டவில்லை. அவன் சுகமடைந்து சாதாரணமாக நடக்கிறான். நம்முடைய கர்த்தரால் செய்ய முடிவது என்னவென்பது மிகவும் அற்புதமாயுள்ளது. அதை அவர் அவனுக்கு செய்திருந்தால், அதை வேறொருவருக்கும் செய்வார். நிச்சயமாக! அவர் மாத்திரம் அதேவிதமான விசுவாசத்தை பெற்றிருப்பாரானால். 9 உங்கள் எல்லோருக்கும் அங்குள்ள சகோ. பென் என்பவரைத் தெரியும். இவர் எல்லோரைக் காட்டிலும் மிக உரக்க ''ஆமென்'' என்று கூறுபவர். அவரைப் பற்றி இதைக் கூற எனக்கு விருப்பமில்லை - அவருடைய மனைவி இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நாம் அனைவரும் பென்னை நேசிக்கிறோம். இது அவருக்கு திருமணமாவதற்கு முன்பு. நான் அப்பொழுது மேற்குக் கரையில் இருந்தேன் (இவர் தெற்கு இந்தியானாவைச் சேர்ந்தவர்). ஒரு நாள் இரவு நான் மேற்குக் கரையில் சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் பாப்டிஸ்டு ஜனங்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். அந்த பெரிய கூடாரம் ஜனங்களால் நிரம்பியிருந்தது... அவர்கள் ஒருவிதமான பண்பாடுள்ள ஜனங்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று பலமான ஒரு சத்தம்கேட்டது. கறுப்பு தலைமயிர் ஒரு மெக்ஸிகன் செய்வதுபோல் இப்படி ஆடினது. இரண்டு பெரிய கால்கள் உயர தூக்கப்பட்டிருந்தது. கைகள் இப்படி இருந்தது. நான் நிறுத்தி விட்டு, ''பென், நீ எப்படி இங்கு வந்தாய்?'' என்றேன். அதோ அவர். பென், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீயும் உன் மனைவியும் எழுந்து நில்லுங்கள். ஜனங்கள் உங்களைக் காணட்டும். இவர்தான் இந்த மூலையிலிருந்து கொண்டு உரக்க “ஆமென்”களை கூறிக் கொண்டிருந்தவர். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக (சகோ. பென், சகோ. பிரான்ஹாம் அவருக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறார்- ஆசி). ஆமென்! தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 10 மற்றொரு மிஷனரி, சகோ. வே. அவர் சுவிசேஷ ஊழியத்துக்காக வெளிநாடு செல்ல முயன்று கொண்டிருக்கிறார். அவர் இன்றிரவு நம்முடன் இருக்கிறார். அவரை நாமறிவோம். அவர் சில நாட்களாக எங்களுடன் பிரயாணம் செய்து வருகிறார். சகோ. வே, எங்கிருக்கிறீர்கள்? நீங்கள் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்களா? இதோ இங்கே அவர்- அவருடைய மனைவியும். இப்பொழுது உங்களுக்கு கூறுகிறேன். இங்கிலாந்துக்கும் நார்வேக்குமுள்ள சண்டை தீர்ந்துவிட்டது. அவர் இங்கிலாந்து நாட்டுக்காரர். அவள் நார்வே நாட்டைச் சேர்ந்தவள். அதெல்லாம் முடிந்துவிட்டது. அருமையானவர்கள். ஆம், ஐயா. சண்டை முடிந்துவிட்டது. 11 அன்றொரு நாள் சகோ. போஸ் படத்தைக் காண்பித்து, ''இதோ ஒரு ஸ்திரீ“- என்றாரே, அதுதான் சகோதரி சாத்மன் (சகோ. சாத்மனுடன் அவளையும் எழுந்து நிற்கச் செய்ய முடியுமானால் நலமாயிருக்கும். அருமையானவர்கள். அவள் நார்வே நாட்டுக்காரி. சகோ. போஸ் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்). அவர், ”உம் - உம்“ (ஜோசப் எப்படி செய்வார் என்று உங்களுக்குத் தெரியும்). அவர், ''உம்- உம், இங்கு ஒரு பெண் இருக்கிறாள், ஒரு சகோதரி, அவள் நார்வே நாட்டுக்காரி. நீங்கள் ஸ்வீடன் நாட்டுக்காரராய் இராமல் போனால், நார்வே நாட்டுக்காரராய் இருப்பது நலம்'' என்றார். நான் வெளியே வந்தபோது, அவர் என்னைப் பார்த்தார். நான், “ஜோசப், நாம் எல்லோரும் ஐயர்லாந்து நாட்டுக்காரராய் இராதது மிகவும் மோசம்” என்றேன். நாங்கள் எல்லோரும் அங்கு வயிறு வலிக்க சிரித்தோம். 12 சகோ. ஹிக்கின்பாதம், எங்கிருக்கிறீர்கள்? அவர் இங்கு எங்கோ இருக்கிறார். அவர் எங்களோடிருக்கும் மற்றுமொரு தேவபக்தியுள்ள மனிதர். அநேக ஆண்டுகளாக அவர் எங்கள் சபையின் தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். அவருடைய நண்பர், சகோதரி ரூத் ஆர்கன் பிரைட். அவள் இங்கிருக்கிறாள். அவள் உட்பாதையில் அமர்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன். எழுந்து நில்! எத்தனை பேருக்கு முழு சுவிசேஷ வர்த்தக குழுவினரின் உப தலைவர்களில் ஒருவரான மைனர் ஆர்கன் பிரைட்டை தெரியும்? அவர் இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரன். 13 ஓ, என்னே, இவர்களில் ஒருவரை நான் காணத்தவறினால்... உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். நீங்கள் எங்களுடன் இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களுக்குத் தெரியவில்லை. உள்ளே வருவதும் வெளியே போவதும்.... அங்கு சகோதரன் சகோதரி. டோ உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். சகோதரி ப்ரெளன், சகோதரன் ப்ரெளன்; சகோ. மக்கின்னி, பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள மற்றொரு மெதோடிஸ்டு போதகர். சகோ. மக்கின்னி எங்கிருக்கிறீர்கள்? அவர் ஓஹையோவைச் சேர்ந்தவர். அதோ பின்னால் இருக்கிறார். அவர் முழுவதுமாக மெதோடிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது, அங்கிருந்து அசைக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று, தேவனுக்காக முன் சென்று கொண்டிருக்கிறார். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் பாட் டைலர், எனக்கு மற்றுமொரு நெருங்கிய நண்பர். சகோ. பாட், எழுந்து நில்லுங்கள் நீங்கள் எல்லோரும் பாட் டைலரை அறிந்து கொள்ளுங்கள். சகோ. பாட், நன்றி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் நாடுகடத்தப்பட்டவர் (out law), துப்பாக்கியால் கொலை புரிந்தவர் - தேவன் அவரை இரட்சித்து பரிசுத்தவானாக்கினார், அவர் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நடந்தும், நடு நடுவே மற்றவர் கார்களில் பிரயாணம் செய்தும் வருகிறார் (hitch-hiking). இந்த ஜனங்கள் எங்கிருந்து வந்துள்ளனர் என்று நான் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. எபிரெயர்: 11ம் அதிகாரத்தை நான் நினைவு கூருகிறேன். “வாளால் அறுப்புண்டார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை''. (எபி.11:37-38). இவர்கள் அனைவரும் இத்தகைய சாட்சியை உடையவராயிருக்கின்றனர். டாம் சிம்ஸன்? டாம் எங்கே? அவர் வந்திருக்கிறாரா? அவருடைய காரை நான் வெளியில் கண்டதாக எனக்கு ஞாபகம். அவரும் அவருடைய குடும்பத்தினரும் - அவர் இங்கிருப்பதாக நினைத்திருந்தேன். ஒருக்கால் நான் தவறாயிருக்கலாம். ஆம், தூண்டிலில் மிதக்கும் தக்கையைபோல ''பூ - பூப்“ சரி. 14 கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. இங்கிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். ஜார்ஜியாவிலிருந்தும் மற்றும் வெவ்வேறு இடங்களிலுமிருந்தும் வந்துள்ள மற்றவர் இங்குள்ளனர். நீங்கள் வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் சிக்காகோவை சேர்ந்த சகோதரி பெக்கின்பாவையா காண்கிறேன்? அவள்தான் என்று நினைத்தேன். சகோதரி லிட்டல் (அவளுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பவள்) சகோதரி டாமிகோ - சிக்காகோவிலிருந்து வந்துள்ள அருமையானவர்கள். இந்த பெண்கள் குழுவும் இங்கு உட்கார்ந்திருக்கும் மற்றவர்களும் எனக்கு மிகவும் அருமையானவர்கள். ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள சகோதரர் (எனக்கு அவருடைய பெயர் ஞாபகமில்லை). ஓ, என்னே, அவர்கள் எல்லோரும் இங்கு வந்துள்ளனர். இந்த ஐக்கியத்தில் நாம் இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்கிறோம். வயோதிப சகோதரன் பாஸ்வர்த் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, ஐக்கியம் (Fellowship) என்றால் என்ன தெரியுமா?“ என்று கேட்டார். ''எனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்“ என்றேன். ''அது இரண்டு ஆட்கள் (Fellows) ஒரு கப்பலில் (Ship) இருப்பது“ என்றார். எனவே அதுதான், நாம் ஐக்கியங் கொண்டிருக்கிறோம். கர்த்தர் உங்கள் மேல் கிருபையாயிருப்பாராக. 15 நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். என் ஊழியத்தின் நாட்களில் நடந்த கூட்டங்களில் இது முக்கியமான ஒன்று என்று என் பட்டியலில் சேர்த்து விடுவேன். நீங்கள் மிக அருமையாக ஒத்துழைத்தீர்கள். இந்த அன்பார்ந்த சகோதரரும் சகோதரிகளும் சிறந்த வரவேற்பு கொடுத்தனர். நான் வீட்டிலிருந்தது போன்ற உணர்ச்சி உண்டாயிருந்தது. எனவே நான் தொண்டை கரகரப்பாகும் வரைக்கும் பிரசங்கித்தேன். எனக்குப் பிறகு சகோ. நெட் ஐவர்சன் சகோ. பிக்பீயுடன் கொலம்பஸில் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவார். சகோ. நெட், இன்றிரவு இங்கிருக்கிறீர்களா? அவர் இங்கிருக்கிறாரா என்று தெரியவில்லை - ஆம், பின்னால் இருக்கிறார். பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு பிரஸ்பிடேரியன். டாக்டர் லீ வேயிலும் அவருடைய மனைவியும்; எனக்கு மிகவும் அன்பார்ந்த நண்பர்கள். சகோ. வேயில் என்னுடன் கூட்டங்களில் பணியாற்றியுள்ளார் - விலையேறப்பெற்ற நண்பர். இவர்கள் எல்லோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்று நினைக்கிறேன். சகோ. வேயில், இங்கிருக்கிறீர்களா? இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கிறீர்களா? பின்னால் இருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி வெயில், எங்கே? உன்னிடம் என் கையை ஆட்ட மாத்திரமே முடிகிறது. சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் அனைவரும் இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. 16 நீங்கள் அனைவரும் எனக்காக ஜெபியுங்கள், நான்... எந்த நேரத்திலும் நாம் கர்த்தருடைய வருகையைக் காணக்கூடும் என்னும் விசுவாசத்தில் சென்று கொண்டிருக்கிறேன். அது எப்படி, எப்பொழுது, எங்கே என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் வரும் போது நான் ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன். சில நேரங்களில், அது இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாமென்று நினைப்பதுண்டு. எப்படியாயினும், அவர் வரும்போது நான் அங்கிருக்க விரும்புகிறேன். அவருடன் கூட நான் செல்ல விரும்புகிறேன். அதுவே என் வாஞ்சை. நான் மாத்திரமல்ல, என் நண்பர்களும் என் சத்துருக்களும் கூட அதில் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். எல்லோரும் செல்லவேண்டும் என்பதே என் விருப்பம். 17 அந்த தரிசனத்தை நான் கண்டபோது- அதை மறுரூபம் என்றழைக்க நான் விரும்பவில்லை. அப்படிப்பட்ட தரிசனத்தை நான் கண்டதில்லை. நான் அங்கு நின்றுகொண்டு நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் திரும்பி என்னையும் பார்க்க முடிந்தது- அண்மையில். உங்களில் அநேகர் அதை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். நண்பர்களே, அதை நீங்கள் இழந்து போகவே கூடாது! அப்படி செய்யாதீர்கள்! நான் இங்குள்ளது போல அங்கு எங்கோ இருந்து, திரும்பி என்னையே பார்க்க முடிந்தது. நான் தரிசனங்களைக் கண்டிருக்கிறேன். தரிசனங்கள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அது தரிசனமாயிருந்தால், நான் கண்டவைகளிலேயே அது மிகவும் வினோதமான ஒரு தரிசனம். அங்கு சென்றிருந்த ஜனங்களை நான் கண்டேன். வயோதிபர் வாலிபராக இருந்தனர். அவர்கள் என்னைப் போன்ற மானிடராக அங்கு நின்றுகொண்டிருந்தனர், ஆனால் பாவமில்லாதவராக இருந்தனர். அது பரிபூரணத்தைக் காட்டிலும் சிறந்த ஒன்று - பரவசப்படுத்தும் ஒன்று. அது என்னவென்று உங்களால் விவரிக்கமுடியாது. நான் திரும்பி வரவேண்டுமென்று அறிந்தபோது... நான் ஒரு காரணத்துக்கு மாத்திரமே திரும்பிவர எண்ணினேன். அதாவது ஜனங்களிடம், அவர்கள் என்ன செய்த போதிலும் அதை இழந்துவிடக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தவே. அதை இழந்து போகாதீர்கள் அதை இழந்து போகாதீர்கள்! அதை நீங்கள் இழக்கக்கூடாது! எல்லாமே - மற்றெல்லாமே போகட்டும். பாருங்கள், நீங்கள் என்ன செய்த போதிலும், அதற்காக ஆயத்தப்படுங்கள். 18 கர்த்தருக்குச் சித்தமானால், இந்த பயணங்களை முடித்து திரும்பி வந்தவுடன், நான் குளிர்காலத்தில் சுவிசேஷ ஊழியத்துக்காக வெளிநாடு செல்லவிருக்கிறேன். எனக்காக ஜெபியுங்கள். ஏனெனில் இங்கு அது சுலபமானது. எப்பொழுதாவது ஒருமுறை பொல்லாத ஆவி கூட்டத்துக்குள் வந்து தொந்தரவு செய்கிறது. ஆனால் அங்கெல்லாம் - மந்திரவாதிகளும் பிசாசுகளும். நீங்கள் பேசுவது இன்னதென்று அங்கு நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கு பிசாசுகள் உங்களுக்கு சவால்விடும். ஆனால் ஓ, எப்படி... ஒரு முறையாவது- (என் கையை வேதாகமத்தின் மேல் வைத்து இதை கூறுகிறேன். ஒரு முறையாவது - உலகம் முழுவதிலும் எத்தனைமுறை அவ்வாறு சவால்விடப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் தேவன் காட்சியில் வந்து, திரையை நீக்கி, எலியாவின் காலத்திலிருந்த அதே தேவன் அவர் என்பதை வெளிப்படுத்திக் காண்பித்தார். 19 அதன் காரணமாகத்தான்... உங்களில் சிலர்... சில போதகர்கள் தங்களுடைய இடங்களுக்கு வரும்படி என்னை அழைக்கின்றனர். நான் அங்கு செல்வதற்கு ஏவப்படும் வரைக்கும் காத்திருக்கிறேன். நான் ஏவப்படாமல் அங்கு செல்வேனானால், என் சுயநாமத்தில் அங்கு செல்வதாகிவிடும்; நான் உங்கள் நண்பனாக மாத்திரம் இருப்பேன். ஆனால் நான் செல்வதற்கு ஏவப்பட்டால், அப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வரக்கூடும். நீங்கள் விமானத்தை விட்டு இறங்கி காலடி எடுத்து வைத்த மாத்திரத்தில், அந்த இடம் உங்களுடையதாகிவிடுகிறது. ஆமென் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எடுத்துக்கொள்கிறேன். அப்பொழுது நீங்கள் அவரை அங்கு சந்திக்கலாம், ஏனெனில் நீங்கள் தேவனுடைய பிரதானிகளாகிவிடுகிறீர்கள். ஆனால் நண்பர்களே, உங்கள் நண்பர்கள் உங்களை அழைத்தார்கள் என்பதற்காக நான் ஊகித்து அங்கு செல்வேனானால்; ஊகித்தல் என்று கூறுவதைக் கேட்டு உங்களுக்கு சலித்திருக்கும். 20 இப்பொழுது கிருபையுள்ள பழைய வேதாகமத்தை நாம் திறப்போம். அதை திறப்பதற்கு முன்பு நாம் ஜெபம் செய்வோம். பாருங்கள், நாம் பேசிக் கொண்டே இருந்துவிட்டோம். இப்பொழுது நமது சிந்தைகளை அடுத்த சில நிமிடங்களுக்கு அவரில் மையப்படுத்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, ஜனங்கள் எங்களிடம் பாராட்டின தயைக்காகவும், எங்களிடம் கொண்டிருந்த தாராள மனப்பான்மைக்காகவும் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண் டிருந்தோம். அதை நாங்கள் எவ்வளவாக பாராட்டுகிறோம்! இப்பொழுதும் பிதாவே, எல்லாவற்றிற்கும் மேலாக உமக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம். ஏனெனில் கர்த்தாவே, நீரே இதைச் செய்தீர். நீரே எங்களை ஆசீர்வதித்து, கிறிஸ்துவுடன் உன்னதங்களில் உட்காரும்படி செய்தீர். சாத்தான் எங்கள் கூட்டத்தில் தொல்லை செய்து அதை பாழாக்கியிருப்பான். ஆனால் நீர் எங்களை அதிகமாக நேசிப்பதால், நாங்கள் ஒன்றுகூடி வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்ளச் செய்தீர். தேவனே, அதை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம். கர்த்தாவே, அதிகமாக குரலை உபயோகப்படுத்தினதால் தொண்டை சிறிது கரகரப்பாயிருந்த போதிலும், உமது ஆவி என் ஆத்துமாவை ஆசீர்வதிப்பதை நான் உணர்ந்தவனாய், மிகவும் சிறந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். வார்த்தைக்கு எந்த குறைவும் இராமல், நான் முடித்து உட்காரும் வரைக்கும் அது ஆறுகளைப் போல் பெருக்கெடுத்து ஓடினது. தேவனே, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 21 கர்த்தாவே, சகோ. பார்க்கரும் அவருடன் பணிபுரிகிறவர்களும், எங்களை அழைத்த இந்த இடத்திலுள்ளவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களைத் தந்தருளுவீராக. அவர்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது, அவர்கள் ஜெபத்திற்கு செவிகொடும், கர்த்தாவே, அவர்களுடைய ஜெபத்திற்கு செவிகொடுத்து, வியாதியஸ்தர்களை சுகப்படுத்தும். அவர்கள் ஏதாவதொன்றை உமது நாமத்தினால் செய்ய முயற்சிக்கும் போது, கர்த்தாவே, அதை கனப்படுத்தும். அவர்களுக்கு ஆவியின் கனிகளைத் தாரும். கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின் மகத்தான வாஞ்சையை அவர் களுக்கு அருளுவீராக- ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாகத் தாரும். அந்த நாளில் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கையில், எல்லாவிடங்களிலுமிருந்து ஆத்துமாக்கள் ஓடி வந்து இந்த விலையேறப்பெற்ற தேவபக்தியுள்ள மனிதனின் தோள்கள் மீதும் அவருடைய பணியாளர்களின் தோள்களின் மீதும் தங்கள் கைகளைப் போட்டு, ''சகோ. பார்க்கர் ஊழியத்தில் நிலைத்திராமல் போயிருந்தால், நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்“ என்பார்களாக. ஓ, தேவனே, கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர் எவருக்கும் இதுவே உத்தமமான விருப்பமாயுள்ளது - இரட்சிக்கும் கிறிஸ்துவினிடம் எளிய, இழந்துபோன மானிடர்களை நடத்துவதென்பதே. 22 இவையனைத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்பொழுதும் கர்த்தாவே, எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். மற்றவிடங்களில் நடக்கவிருக்கும் கூட்டங்களை ஆசீர்வதியும். ஒவ்வொரு வீட்டுக்கும் நீர் செல்லும். இன்றிரவு நாங்கள் வெவ்வேறு இடங்களிலுள்ள எங்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, அவர்களுடன் தங்கியிரும். நீரே சுக்கான் பிடிப்பவராய் இரும். கர்த்தாவே, சத்துருவை எங்களிடமிருந்து விலக்கும். இவைகளை அருள வேண்டுமாய் ஜெபிக்கிறேன். எங்கள் இருதயத்தின் வாஞ்சையை நிறைவேற்றும். இன்றிரவு ஏறெடுக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் நிறைவேற்றும். இன்றிரவு மறுபடியும் ஜீவ அப்பத்தைப் பிட்டுத்தாரும் என்பதே என் விண்ணப்பமாயுள்ளது. இங்கு இரட்சிக்கப்படாதவர் யாராகிலும் இருந்தால், அவர்களை இரட்சியும். யாருக்காகிலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தேவைப்பட்டால், இன்றிரவு அது வருவதாக. வியாதியஸ்தர் யாராகிலும் இருந்தால், அவர்களை சுகப்படுத்தும். சோர்ந்து போயிருப்பவர்களுக்கு சந்தோஷத்தைத்தாரும். கர்த்தாவே, இதை அருளும். நாங்கள் வார்த்தையை இப்பொழுது படிக்கும்போது, அதை ஆசீர்வதித்து தாரும். அதை எழுதினவர் தாமே பேச வேண்டிய பொருளை எங்களுக்குத் தந்தருளுவாராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 23 பரி. யோவான் முதலாம் அதிகாரம், 35 முதல் 41 வசனங்களில் அடங்கியுள்ள விலையேறப்பெற்ற வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன்: @மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டு பேரும் நிற்கும்போது, @இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். @அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். @இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். @அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. @யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின் சென்ற இரண்டு பேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். @அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். @பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். யோவான் 1: 35-42 தேவன்தாமே அவருடைய வார்த்தையுடன் தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 24 கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு பொருளாக உபயோகிக்க இரண்டு சொற்களை உபயோகிக்க விரும்புகிறேன். அந்த இரண்டு சொற்கள் உறுதி கொள்ளுதல் (Convinced), அக்கறை கொள்ளுதல் (Concerned) என்பனவாம். தேசம் முழுவதும் குளிர்ந்த நிலையடைந்துள்ளதை நாம் காண்கிறோம். அதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். நான் முதலில் ஊழியத்தைத் தொடங்கினபோது, கூட்டங்களில் அதிக உற்சாகம் இருந்தது. ஜனங்கள் எல்லாவிடங்களிலும் ஜெபக் கூட்டங்களுக்கு சென்றனர். குற்றப்படுத்தினர்... செய்தித்தாள்கள் என்னைக் குற்றப்படுத்தின. ஒரு ஸ்திரீ வாடகை காரில் மூவாயிரம் மைல் பிரயாணம் செய்து கனடாவில் நடந்த கூட்டத்துக்கு வந்தாள். ஆனால் இப்பொழுது அவர்கள் அவ்வளவு அக்கறை கொள்வதில்லை. விழுந்து போதல் உண்டானது என்பது போல் தோன்றுகிறது. அதிக அக்கறை இல்லாதது போல் காணப்படுகிறது -இருக்கவேண்டிய அளவுக்கு அக்கறை இல்லை - வெகு சிறு அக்கறையே காணப்படுகிறது. 25 இப்பொழுது நமக்குள்ள ஒரே அக்கறை என்னவெனில் - முன்பு நடைபெற்ற முழு இரவு கூட்டங்களில், ஒரு முறை நான் கூட்டத்தை விட்டு செல்லாமல் மேடையில் எட்டு நாட்கள் இரவும் பகலும் நின்று மக்களுக்கு ஜெபித்ததுண்டு. அதன் பிறகும் ஏறக்குறைய நாற்பது சொச்சம் ஆயிரம் ஜனங்கள் ஜெபத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? ஜெபம் செய்து முடிக்க முடியவில்லை. போதகர்கள் ஒரு கூட்டம் ஜனங்களை காடுகளில் இந்தப் பக்கத்திலும், வேறொரு கூட்டம் ஜனங்களை மற்ற பக்கத்திலும் கொண்டு சென்று, அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் வரைக்கும் ஜெபிப்பது வழக்கம். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும்வரைக்கும் இளைப்பாறவில்லை. உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். நான் நாற்பத்திரண்டு ஆயிரம் என்று சொன்னேன்; நீங்கள் பத்திரிக்கையைப் பார்த்தால், ஜெபம் செய்யப்பட காத்திருந்தவர்கள் இருபத்தெட்டாயிரம் பேர். ஜோன்ஸ்பர்க்கை சுற்றி அநேக மைல் தூரம் வரைக்கும், வாடகைக்கு இடம் கிடைக்கவில்லை. பட்டிணங்களில் கூடாரம் போட்டு ஜனங்கள் தங்கினர். ஆனால் இப்பொழுதோ அவர்களுக்கு அவ்வளவு அக்கறையில்லை. பாருங்கள், எழுப்புதல் அக்கினி மெல்ல அணைந்து கொண்டிருக்கிறது. 26 இப்பொழுதுள்ள அக்கறை, “நீங்கள் வந்து சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள்” என்பதே. அல்லது இப்பொழுது காணப்படும் பெரிய அக்கறை வானொலி ஊழியத்தை அல்லது தொலைக் காட்சி ஊழியத்தை ஆதரித்து, அதை ஒருவிதமான காட்சியாக செய்துவிடுவதாகும் (நன்மைக்காகவே, நிச்சயமாக); பிரம்மாண்டமான கட்டிடங்கள், பெரிய பள்ளிகள் கட்டுதல் போன்றவை. அவைகளின் பேரிலே இப்பொழுது அக்கறை காட்டப்படுகின்றது. முன்பு ஜெபத்திலும் நெருக்கப்படுதலிலும் அவர்கள் கொண்டிருந்த தரிசனம் இப்பொழுது மறைந்துவிட்டது. ஏதோ ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்று நான் அறிய விரும்புகிறேன். 27 அவர்கள் இப்பொழுது அதைக் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதில்லை... நீங்கள் சபைக்குச் சென்று பீடத்தண்டை வரும்படி ஜனங்களை அழைக்கக்கூடும். முன்பெல்லாம் அவர்கள் பீடத்தண்டை ஓடிவருவார்கள். நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது, பிரசங்கத்தை முடிப்பதற்கு முன்பே, ஜனங்கள் பீடத்தண்டையிலும், உட்பாதையில் எல்லாவிடங்களிலும் வரிசையாக நின்று கொண்டிருப்பார்கள். அவ்வமயம் பரிசுத்த ஆவி கூட்டத்திலிருந்தவர்கள் மத்தியில் அசைவாடி, ஒவ்வொருவரைக் குறித்து ஒவ்வொன்றை சொல்வதை நான் கண்டிருக்கிறேன். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு தங்கள் இருக்கைகளிலேயே மயங்கி விழுந்த காலமுண்டு. 28 எங்கோ ஏதோ தவறுள்ளது. இப்பொழுதும் நாம் அதையே செய்து கொண்டிருக்கிறோம். அதே சுவிசேஷத்தை இன்னமும் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம். நான் தொடங்கின முதற்கு சிறிதும் கூட மாறவில்லை. நான் அப்பட்டமான தேவனுடைய வார்த்தையுடன் தொடங்கினேன். அன்று முதல் அதிலேயே நிலைத்திருக்கிறேன். முப்பத்திரண்டு ஆண்டுகளாக நான் பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்து வந்திருக்கிறேன். இதுவரைக்கும் நான் பிரசங்கம் செய்ததை வாபஸ் வாங்கவோ அல்லது எதையும் மாற்றவோ கிடையாது. நான் தொடங்கின போது எதை கூறினேனோ அதையே இப்பொழுதும் கூறி வருகிறேன். அதை நான் வாபஸ் வாங்க முடியாது. அது தேவனுடைய வார்த்தை இங்கு வேதாகமத்தில் கூறியுள்ளது போலவே நான் கூறினால், அடுத்த முறையும் அதையே நான் கூறவேண்டும். ஏனெனில் அப்படித்தான் இங்கு எழுதப்பட்டுள்ளது, பாருங்கள் எனவே, அதைக் குறித்து ஒன்றுமே செய்யமுடியாது. பரிசுத்த ஆவி அதே கிரியைகளை இப்பொழுதும் செய்து வருகிறார். ஆனால் போதிய அக்கறை இல்லாதது போல் காணப்படுகிறது. ஏனென்று வியக்கிறேன். 29 முன்பிருந்த அக்கறை ஏன் இப்பொழுது இல்லை? அதற்கு காரணம் என்னவெனில், அவர்கள் முன்பு போல் உறுதி கொள்ளாதவர்களாயிருக்கின்றனர், நீங்கள் அக்கறை கொள்வதற்கு முன்பு உறுதி கொண்டவர்களாயிருத்தல் அவசியம். நீங்கள் அக்கறை கொள்ளாமல் நேரத்தை வீணாக்குகிறீர்கள். நீங்கள் சுவிசேஷத்தை உரைத்துஅப்படி ஏதாவதொன்றை செய்வதற்கு பதிலாக, பெரிய பள்ளிகள் போன்றவைகளைக் கட்டி, போதகர்கள் பிரசங்க பீடத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை கற்பித்து கொடுக்கிறீர்கள். நான் நம்புவது என்ன தெரியுமா? இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்பதைக் குறித்து ஜனங்கள் உறுதி கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன், இந்த காலத்தில் அவர் வரப் போகிறார் என்று ஜனங்கள் உறுதிகொண்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கை உறுதியாயிருக்கவில்லை. அது உண்மை . அவர் அவர்களுடன் இருக்கிறார் என்று நம்புவது கிடையாது. அவர்கள் நம்பினால், வார்த்தைக்கு திரும்பி வந்திருப்பார்கள். உண்மை! 30 இப்பொழுது அநேகர் இதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அன்பு - அன்பு என்றால் ஒழுங்கு. உங்களுக்கு ஜனங்களின்மேல் அன்பிருந்தால் அவர்களை ஒழுங்குக்குள் கட்டுப்படுத்தவேண்டும். இன்று காலை நான் கூறினது போல், உங்கள் மகள் வீதியில் உட்கார்ந்து கொண்டு மண்ணினால் அப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்தால், உங்களுக்கு உண்மையில் அவள் மேல் அன்பிருந்தால், அவளை வீதியிலிருந்து உள்ளே கொண்டு வருவீர்கள். உன் மனைவி, ''ஜான், வேறொருவன் (உன் பெயர் என்னவாயிருந்தாலும்) - உங்களுக்குத் தெரியுமா, அ. அ...'' என்று கூறினால், ''அவள் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. அவள் அதைசெய்ய விரும்புகிறாள். அவளை நான் அதிகமாக நேசிப்பதால், அவள் இதை செய்ய அனுமதிப்பேன்“ என்று சொல்லி, வேறொருவனுடன் அவள் செல்ல விட்டுவிடுவீர்களா? நீங்கள் கணவனாயிருக்க தகுதியேயில்லை. அவள் உங்களைத் தள்ளிவிட்டு, அவளை நேசித்து காப்பாற்றக் கூடிய வேறொருவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தில் நான் கூறவில்லை, ஏனெனில் நீங்கள் அப்படி செய்யக்கூடாது. 31 நான் கூற முயல்வது என்னவெனில், தேவன் ஏவாளிடம், ''பாவம் ஏவாள். நீ என் மகள் என்று உனக்குத் தெரியும். நான் - நான் - நான்... நீ வேண்டுமென்று அதை செய்யவில்லை'' என்று கூறியிருந்தால் எப்படியிருக்கும்? அவள் நிச்சயமாக வேண்டுமென்று அதை செய்யவில்லை. அது உண்மைதான். இருப்பினும் அவள் அதை செய்தாள். அவள் அதை செய்தாள் என்று நமக்குத் தெரியும். அதன் பலன்களை இப்பொழுதும் நாம் காண்கிறோம். ஆனால் பாருங்கள், அவர் அவளை நேசித்தார், அவர் அவளுக்களித்திருந்த வார்த்தையை காக்க வேண்டியிருந்தது. அவ்வாறே தேவன் நமக்களித்துள்ள வார்த்தையையும் காக்க வேண்டியவராயிருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அவருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிந்து, அவர் செய்வதாக வாக்களித்துள்ளவைகளை செய்து நிறைவேற்றி உறுதிபடுத்துவதை நாம் காணும் போது, வார்த்தை உண்மையென்னும் உறுதியான நம்பிக்கைப் பிறக்கிறது. 32 இப்பொழுது, நாம் காணும் போது... நாம் கொண்டு வருகிறோம். அண்மையில் ஒரு பெரிய சுவிசேஷகருக்கும் ஒருமுகமதியனுக்கும் வாக்குவாதம் நடந்தது. நீங்களும் என்னைப் போலவே அதை செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். இந்த முகமதியன் அந்த சுவிசேஷகரிடம், இயேசுகிறிஸ்துவை வழிபடுவது ஒரு மனித வழிபாடு என்றும், ஜனங்கள் ஒரு மனிதனைப் பின்பற்றுகின்றனர் என்றும் சவால் விடுத்தான். சுவிசேஷகர் விசுவாசித்த தேவனில் அவனும் விசுவாசம் கொண்டிருந்தான். ஆனால் அவன், “இயேசு அவருடைய குமாரன் அல்ல. அது மனிதனால் உண்டாக்கப்பட்ட வழிபாடு'' என்றான். அவன் அந்த சுவிசேஷகருக்கு சவால் விடுத்து, ''கிறிஸ்து செய்த அதே கிரியைகளை அவரைப் பின்பற்றுவோரும் செய்வார்கள் என்று வேதம் கூறுகிறது. நான் வியாதிப்பட்ட முப்பது பேர்களை கொண்டு வருகிறேன். நீங்களும் வியாதிப்பட்ட முப்பது பேர்களைக் கொண்டு வாருங்கள். நான் அவர்கள் ஒவ்வொரு வரையும் சுகமாக்குகிறேன். நீங்கள் செய்கின்றீர்களா என்று பார்ப்போம்'' என்றான். சுவிசேஷகர் ஓட்டம் பிடித்தார். நான் அந்த சுவிசேஷகராயிருந்து, அதை செய்ய எனக்குப் போதிய விசுவாசம் இல்லாமலிருந்தால், அந்த அவிசுவாசி அங்கு நின்றுகொண்டு சவால்விட சம்மதித்திருக்க மாட்டேன். ''எங்கள் ஆதிக்கத்தில் அதை செய்ய விசுவாசம் உள்ள ஒருவரை நானறிவேன்'' என்று கூறியிருப்பேன். 33 ஏன்? அது தேவன் என்று நீங்கள் முதலாவதாக உறுதி கொள்ளவேண்டும். அப்பொழுது நீங்கள் எங்கு நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். அது உண்மை. முதலாவதாக உறுதி கொள்ளுதல், பிறகு நீங்கள் அக்கறை கொள்கின்றீர்கள். தேவன் தங்களோடிருப்பதாக ஜனங்கள் உரிமை பாராட்டினாலும், அவர்கள்... எல்லோருமே அல்ல... “செயல்கள் சொற்களைக் காட்டிலும் உரக்க பேசுகின்றன” என்று என் தாயார் கூறுவதுண்டு. நிச்சயமாக அது அப்படி செய்கிறது. நீங்கள் அதை செயல்முறையில் காண்பித்து, விசுவாசித்து, அது உண்மையென்று உறுதிகொள்ளவேண்டும். அப்பொழுது நீங்கள் அக்கறை கொள்வீர்கள். இயேசு, ''நீ என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் ஆடுகளை போஷிப்பாயாக'' என்றார். நாம் ஆடுகளை போஷிக்கும் விஷயத்தில் அதிகமாக தவறியிருக்கிறோம் என்பது என் கருத்து. ''நீ என்னிடத்தில் அன்பாயிருந்தால், என் ஆடுகளை போஷிப்பாயாக'' இன்றைக்கு அது, “என் ஆடுகளுக்கு மயிர் கத்தரி” என்பதாக உள்ளது. அவர்களை ஓரிடத்துக்குக் கொண்டுசென்று, அவர்களிடமுள்ள எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, அவர்கள் வீடுகளை அடமானம் வைக்கச் செய்து, அவர்களுடைய வயோதிப உபகாரச் சம்பளத்தையும் மற்றெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளுதல். எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள இயேசு கூறவில்லை. 34 இன்று காலை சகோ. பார்க்கர் “தேவன் தமது ஜனங்களை நேசிக்கிறார்” என்றார். அவர் தமது ஆடுகளை நேசிக்கிறார். அவர் 'அவைகளைப் போஷியுங்கள்' என்றார். ஆடுகளுக்கு ஆடுகளின் உணவு தேவை. அவர் ஒருபோதும் ''என் ஆடுகளுக்கு கல்வி கொடுங்கள்'' என்று சொல்லவில்லை. அவர், “அவைகளைப் போஷியுங்கள்” என்று தான் கூறினார். ''கல்வி கொடுங்கள்'' என்றல்ல, “போஷியுங்கள், அவைகளுக்கு ஆடுகளின் உணவைக் கொடுங்கள்.'' ஆடுகளின் உணவு என்றால் என்ன? ஜீவ அப்பம் (இயேசுவே ஜீவ அப்பம்), சுவிசேஷம், சத்தியம். யாரோடும் ஒப்புரவாகாமல் அதை பிரசங்கியுங்கள். சுவிசேஷத்தின் போதகர் என்னும் முறையில், அவர்கள் ஆத்துமாக்களுக்காக நீங்கள் பதில் கூற வேண்டியவர்களாகும் போது, நீங்கள் தைரியமாக நின்று, ''இப்படித்தான் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறமுடியும்.அவர்களுக்கு சத்தியத்தை போஷியுங்கள். என் ஆடுகளைப் போஷியுங்கள். 35 யோவான் தன் காலத்தில் மேசியா வருவாரென்று உறுதியாக அறிந்திருந்தான்... யோவான் ஸ்நானன் அதை அறிந்திருந்தான். அவன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மேசியா வருவாரென்று அவன் உறுதி கொண்டிருந்தான். அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தபோது, அவன் பள்ளிகளைத் தொடங்கவில்லை, அவன் கல்லூரிகளைத் தொடங்கவில்லை, அவன் ஸ்தாபனங்களைத் தொடங்கவில்லை. ஏன்? மேசியா அவன் காலத்தில் வருவாரென்று அவன் உறுதியாக நம்பினான். அவனுடைய கனி, அவனுடைய செய்தி, அவனுடைய செயல் அனைத்துமே அதற்கு சாட்சியாக விளங்கினது. அவர் இந்தகாலத்தில் வரப்போகிறார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். நாம் ஏன் பெரிய காரியங்களை சேமித்து வைக்க முயல்கிறோம்? நாம் ஏன் கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் பள்ளிகளையும் கட்டிடங்களையும் கட்டி, அதே சமயத்தில் இயேசு வரப்போகிறார் என்று சொல்கிறோம்? பொது ஜனங்கள் அதைக் காட்டிலும் நன்றாக அறிந்துள்ளனர். நீங்கள் விசுவாசிக்காத ஒன்றைக் குறித்து பேசுகின்றீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். நீங்கள் பிரசங்கிப்பதை செயல் முறையில் காண்பியுங்கள்! உண்மை. அதைத்தான் நாம் செய்யவேண்டும். 36 யோவான் உறுதியாக அறிந்திருந்தான். அவனுடைய பிறப்பு வினோதமானது என்று அவனுக்குத் தெரியும். சகரியா தேவதூதனைக் கண்டது நம்மெல்லாருக்கும் தெரியும். அது வயோதிப தம்பதிகளுக்கு மிகவும் இறுக்கமாக இருந்திருக்கும். சகரியா வயது சென்றவன், எலிசபெத்தும் வயது சென்றவள். ஆனால் என்றாவது ஒருநாள் தேவன் அவர்களுக்கு ஒரு குழந்தையை அருளுவார் என்று அவர்கள் விசுவாசித்தனர். அவள் மலடியாயிருந்தாள். யோவான் விசித்திரமான பிறப்பை உடையவனாயிருந்தான் என்று நாமறிவோம். அவன் தேவனுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அந்த பையன் ஊழியத்துக்கு வருவதை அவர்கள் காண உயிர்வாழ மாட்டார்கள் என்பது அவர்களுக்கு கடினமாயிருந்திருக்கும். யோவானின் தகப்பன் ஒரு ஆசாரியன். அப்படியிருந்த போதிலும், யோவான் தன் தகப்பன் சென்ற வேதசாஸ்திர பள்ளிக்கு செல்லவில்லை. அதனுடன் கலந்துகொள்ள அவன் பிரியப்படவில்லை. ஏனெனில் அவன் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருப்பான் என்று வேதத்தின் வாயிலாக அறிந்திருந்தான். அவன் மேசியாவுக்கு முன்னோடியான தூதனாயிருப்பான் என்பதைக் கண்டுகொண்டான். அதைக் குறித்து அவன் நிச்சயமுடையவனாயிருக்க வேண்டும். எனவே அவன் உறுதிகொள்ளும் வரைக்கும் வனாந்தரத்தில் காத்திருந்தான். அதன்பிறகு அவன் அக்கறை கொண்டான். அவன் உறுதி கொண்டான். அவன்... அவன் நிலைத்திருக்க விரும்பினான். அவன் இயேசுவைக் காண்பான் என்று முழு நிச்சயமாக அறிந்திருந்தான். முடிவில் அவன், ''இதோ... உங்கள் மத்தியில் அவர் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவில் இருக்கிறார்'' என்றான். ஓ, அது எனக்குப் பிரியம். 37 இன்றிரவு நமது மத்தியில் ஒருவர் இருக்கிறார். அவரை நாம் அறிந்திருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். சாட்சி கொடுக்கிறவர் அவரே என்று நான் நம்புகிறேன். இயேசு சீக்கிரம் வரப்போகிறார் என்று மகத்தான பரிசுத்தஆவி தாமே சாட்சி கொடுக்கிறார். அது வார்த்தையின்படி உள்ளது. அதற்கான எல்லா அடையாளங்களும் நிறைவேறி வருகின்றன. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம்! யோவான் எந்த தவறும் செய்ய விரும்பவில்லை. எனவே மேசியா யாரென்பதைக் குறித்து அவன் உறுதிகொள்ளும் வரைக்கும் வனாந்தரத்திலேயே தங்கியிருந்தான். அவன் மேசியாவைக் காணும்போது எந்த விதமான அடையாளத்தை எதிர்நோக்க வேண்டுமென்று தேவன் அவனிடம் கூறியிருந்தார். எனவே அந்த அடையாளம் அவரைப் பின்தொடருவதை அவன் கண்டபோது, அவரே மேசியா என்று உறுதி கொண்டான். அவன், ''அது அவர் என்று நான் சாட்சி கொடுக்கிறேன்“ என்றான். யோவான் பிறப்பதற்கு 712 ஆண்டுகட்கு முன்பே அவனைக் குறித்து ”இதோ கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவர் பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருப்பான்“ என்று தீர்க்கதரிசியின் மூலம் முன்னுரைத்தார். எந்த தேவன் இவனை இந்த பணிக்கென்று முன் குறித்திருந்தாரோ, அவர் அவனிடம் பேசும் வரைக்கும் அவருக்காக காத்திருந்தான். ஆமென் என்ன நடக்கப் போகிறதென்று தேவன் அவனிடம் கூறினபோது, அவன் உறுதி கொண் டான். அவன் அந்த அடையாளத்தைக் கண்டபோது, ''இதோ அவர்” என்றான். ஆமென்! 38 நாமும் அவ்வாறே உத்தமமாயிருந்து பீடத்தண்டை காத்திருப்போமானால் ஏதோ ஒரு சிறு உணர்ச்சியைப் பெற்று, குதித்து அங்கிருந்து ஓடிவிடுவதல்ல, அங்கேயே தங்கியிருப்பது! என்ன நேர்ந்த போதிலும், பரிசுத்தஆவி அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் உங்களை ஆட்கொண்டு, நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள் என்று முழுவதுமாக உறுதிகொள்ளும் வரைக்கும் அங்கேயே தங்கியிருங்கள். நீங்கள் மரித்து மறுபடியும் உயிரோடெழும்பும் வரைக்கும் அங்கேயே தங்கியிருங்கள். அப்பொழுது நீங்கள் ஒரு மாய்மாலக்காரனாக தண்ணீருக்கு செல்லமாட்டீர்கள். அவர் உங்களுக்காக மரித்தார் என்றும், நீங்கள் அவரோடு கூட மரித்தீர்கள் என்றும், நீங்கள் அவருடன் கூட எழும்ப தண்ணீருக்குள் செல்கிறீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அவர் மரித்து மறுபடியும் எழுந்தார் என்றும், நீங்கள் அவரோடு கூட மரித்து, ஏற்கனவே எழுப்பப்பட்டிருக்கிறீர்கள், இப்பொழுது நீங்கள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு ஆடுகளின் ஆகாரத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உலகிற்கு காண்பிப்பீர்கள். 39 நாம் பேசிக் கொண்டிருக்கும் சீமோனின் சகோதரனாகிய அந்த மகத்தான அந்திரேயா, தான் உறுதிகொள்ளும் வரைக்கும் இரவு முழுவதும் தங்கியிருந்தான். அவன் கரையில் சென்று கொண்டிருந்தபோது, இந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய யோவான், ''ஒருவர் வருகிறார், காலம் சமீபித்திருக்கிறது. புல்லின் கீழ் பதுங்கியுள்ள விரியன் பாம்பு குட்டிகளே, ஆபிரகாம் உங்களுக்குத் தகப்பன் என்றும், 'நான் இதை சேர்ந்தவன், அதை சேர்ந்தவன்' என்றும் உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதீர்கள். தேவன் இந்த கற்களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்'' என்றான். ஓ, அவன் மரங்களின் வேர் அருகே கோடாரியை வைத்துக் கொண்டிருந்தான். பாருங்கள், யோவான் வனாந்தரத்து மனிதன். அவன் எதைக் குறித்து பேசுகிறான் என்று கவனியுங்கள்: கோடாரிகள், மரங்கள், பாம்புகள். பாருங்கள்? அவன் இவைகளோடு வனாந்தரத்தில் பழக்கப்பட்டவன். எனவே அவன், “கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது, ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான். (லூக். 3:9). கோடாரியைக் கொண்டு மரத்தை வெட்டுவது, பாம்புகளின் தலைகளை வெட்டுவது போன்றவை. அவன் வனாந்தரத்து மனிதன். 40 இயேசு, “எதைப் பார்க்கப் போனீர்கள்?'' என்று கேட்டதில் வியப்பொன்றுமில்லை- அந்த மறக்கப்பட்ட மலைப் பிரசங்கத்தில் அதைக் குறித்து நான் பிரசங்கித்திருக்கிறேன். அவர் மலைக்குச் சென்றபோது, யோவானின் சீஷர்களிடம், ''எதைப்பார்க்கப் போனீர்கள்?மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அப்படிப்பட்டவர்களை அவர்கள் 'டாக்டர், பரிசுத்த பிதா' என்றழைக்கின்றனர். அவர்கள் மெல்லிய வஸ்திரந்தரித்து, குழந்தைகளுக்கு முத்தமிட்டு, வாலிபரை விவாகம் செய்துவைத்து, வயோதிபரை அடக்கம் செய்கின்றனர். அப்படிப்பட்டவன் பேனாக்கத்தியை உபயோகிக்கிறான்” என்றார். போர்க்களத்தில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உபயோகிக்க அவனுக்கு எப்படித்தெரியும்? ''அப்படிப்பட்டவனைப் பார்க்கப் போனீர்களோ?'' அவர், காற்றினால் அசையும் நாணலைப் பார்க்கவா போனாய்? ஒரு சிறு குழு வந்து உன்னை இதிலிருந்து அதற்கும் அதிலிருந்து இதற்கும் மாற்றக் கூடுவதையா?'' என்றார். யோவான் அப்படி மாறுபவன் அல்ல! அவன் உறுதி கொண்டிருந்தான். அவன் எங்கு நிலைத்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவனுடைய ஸ்தானத்தை அவன் அறிந்திருந்தான் யோவானை எதுவும் அசைக்கவே முடியவில்லை. முடியவே இல்லை! அவர், ''அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்?தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார் (மத். 11:9). அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேன்மையானவன். 41 எனவே யோவான் உறுதி கொண்டு பிரசங்கம் செய்யத் தொடங்கினான். அந்திரேயா அவன் கூட்டங்களுக்கு வருவது வழக்கம். இயேசு அந்த வழியாய் கடந்து போனபோது, அந்திரேயாவும் வேறொரு சீஷனும் அங்கிருந்தனர். யோவான் அவரைச் சுட்டிக்காட்டி, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். அவர்கள் அவருக்குப் பின் சென்றனர். என்னே, அது... என் பிரசங்கம் அவ்வளவு வலிமையாக இருந்தால் நலமாயிருக்கும். நான், ”இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி“ என்று உரைத்து, எல்லோருமே அவருக்குப் பின் செல்வார்களானால் என்னே, நான்... ”சகோ. பிரான்ஹாமே, அவரை எங்கே காணலாம்?'' எனக்கு காண்பிக்கமுடியும். 42 அண்மையில் நான் வர்த்தகர் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கு மேற்குக் கரையில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். எவனோ ஒருவன் என்னிடம் வந்து, “ஊ... நீர் போதகர் அல்லவா?'' என்று கேட்டான். நான், “ஆம், ஐயா” என்றேன். அவன், “அப்படியானால் வர்த்தகரிடம் உமக்கு என்ன வேலை?'' என்றான். நான், “நானும் ஒரு வர்த்தகன்” என்றேன். அவன், ''ஊ, நீர் எந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறீர்?'' என்றான். நான், ''உறுதி மொழி (Assurance) வியாபாரம்“ என்றேன். அவன் “எத்தகைய காப்பீடு (Insurance)” என்றான். நான், “உறுதிமொழி'' என்றேன். அவன், ''அது என்னது?'' என்றான். நான், “இயேசு என்னுடையவர் என்னும் ஆசீர்வாதமான உறுதிமொழி. அதில் ஒரு 'பாலிஸி' (Policy) எடுக்க நீ விரும்பினால், உன்னிடம் நான் பேச ஆவல் கொள்கிறேன்” என்றேன். 43 என் நண்பர், திரு. ஸ்னைடர், மிகவும் அருமையானவர். அவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரை என் சிறுவயது முதற்கே அறிவேன். நாங்கள் ஒன்றாக பள்ளிக்கு சென்றோம். அவர், ''பில்லி, உமக்கு சில காப்பீடுகளை (Insurance) விற்க வந்திருக்கிறேன்'' என்றார். ஒருமுறை காப்பீட்டுத் தொகை வழங்குவதில் நான் ஏமாற்றப்பட்டேன். அன்று முதல் நான் காப்பீட்டில் சேர்வதேயில்லை. எனவே நான், ''வில்மர், எனக்கு விருப்பம்தான். ஆனால் எனக்கு உறுதிமொழி (Assurance) உண்டு'' என்றேன். அவர், ''அப்படியா?'' என்றார். என் மனைவி, நான் மாய்மாலக்காரன் என்பது போல் என்னை உற்று பார்த்தாள். எனக்கு காப்பீடு எதுவும் இல்லையென்று அவளுக்குத் தெரியும். நான் 'உறுதிமொழி' என்றேன். அவர், “பில்லி, எனக்கு வருத்தம். அது எந்த நிர்வாகம்?'' என்றார். நான், ''நித்திய ஜீவன்“ என்றேன். “அப்படி ஒரு நிர்வாகம் உள்ளதாக நான் கேள்விப்படவில்லையே'' என்றார். நான்,“நீ கேள்விப்பட வேண்டும்'' என்றேன். ஓ, அது சரியென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். 44 எனவே யோவான் பிரசங்கம் செய்து, “இதோ அவர்! இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான். அவர் கூட்டத்தாரின் மேல் அசைவாடி, ஒரு பாவியை அல்லது வியாதிப்பட்ட ஒருவரை இழுத்து, அவர்களிடம் பேசும் போது, அது அதே தேவன் என்று நான் அறிந்திருக்கிறபடியால்- என்னால் அதை செய்யமுடியாது என்று எவருக்கும் தெரியும் - நான், ''இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி“ என்று கூற விரும்புகிறேன். ஜனங்களும், ''அதை நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது என் பாவங்களுக்காக மனஸ்தாபப்படுகிறேன். நான் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்'' என்று கூறவேண்டுமென்று விரும்புகிறேன். ஓ, அவர்கள் அப்படி செய்வதைக் காண எனக்குப் பிரியம். 45 இந்த சீஷர்கள் இயேசுவுக்குப் பின் சென்றனர். அவர் திரும்பி அவர்கள் பின் செல்கிறதைக் கண்டு, ''என்ன தேடுகிறீர்கள்?'' என்றார். அவர்கள், ''ரபீ (ரபீ என்றால் போதகர் என்று அர்த்தம்), நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' என்று கேட்டார்கள். அவர், ''வந்து பாருங்கள்'' என்றார். அது ஒரு அருமையான அழைப்பு வந்து பாருங்கள். அது எனக்குப் பிரியம். அதைத் தான் பிலிப்பும் நாத்தான்வேலிடம் கூறினான். நாத்தான்வேல், ''நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ?'' என்று கேட்டதற்கு, பிலிப்பு, “வந்து பார்'' என்றான் (யோவான் 1:46). எனவே அவன் சென்றான். வந்து பாருங்கள்! வீட்டில் உட்கார்ந்து கொண்டு குற்றம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வந்து கண்டுகொள்ளுங்கள்! வந்து நீங்களே பாருங்கள்! அது சாயங்கால நேரமாயிருந்தது. அந்திரேயா முழு இரவும் அங்கு அவரிடத்தில் தங்கினான். ஓ, அது நல்ல வழி. அவன் உறுதி கொள்ளும் வரைக்கும் அங்கு தங்கினான். அவர் அவனிடம் இரவு முழுவதும் பேசினவை, அவர் செய்த காரியங்கள் போன்றவை அவர் மேசியாவென்று அந்திரேயாவை முழுவதுமாக உறுதி கொள்ளச் செய்தது. 46 அடுத்த நாள் - அது அதிகாலையாயிருக்குமென்று நினைக்கிறேன் - அவன் 'கோட்டையும் தொப்பியையும்' எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஏனெனில் மீன் பிடிக்க பேதுரு ஆற்றிற்கு அப்பொழுது சென்றிருப்பான். அவன் பேதுருவிடம், ''நாங்கள் யாரைக் கண்டோம் என்று வந்து பார். அவர் மேசியா'' என்றான். அவன் உறுதி கொண்டான். அவர் மேசியாவென்று அவன் முழுவதுமாக உறுதி கொண்ட பிறகு, தன் சகோதரனைக் குறித்து அக்கறை கொண்டான். இன்று காணப்படும் விஷயம் என்னவெனில், ஜனங்கள் செய்தியைக் குறித்து உறுதி கொண்டிருக்கவில்லை. ஜனங்கள் பரிசுத்த ஆவியைக் குறித்து உறுதி கொண்டிருக்கவில்லை. நீங்கள் உண்மையிலேயே உறுதி கொண்டிருப்பீர்களானால், நீங்கள் அக்கறை கொண்டிருப்பீர்கள். அதைக் குறித்து நீங்கள் செய்யவேண்டிய அனைத்தையும் உங்களால் இயன்றவரை செய்திருப்பீர்கள். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, நான் பிரசங்கி அல்ல எனலாம். அப்படியில்லாமல் போனாலும், நீங்களும் ஏதாவதொன்றைச் செய்யமுடியும். 47 ஒருசமயம் நாங்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு விவசாயி இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியைப் பெற்றார். அவருக்கு இந்த அனுபவமும் ஒரு மோட்டார் வாகனமும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. அவர் அநேகரை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கூட்டத்துக்குக் கொண்டு வந்தார். அவர்களில் முப்பது பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அவர் ஏன் இப்படி செய்தார்? அவர் உறுதி கொண்டார் அவர் உறுதி கொண்ட போது, அக்கறை கொண்டார். அவருடைய சிறு மகள் சுகம் பெற்றாள். ஒவ்வொரு இரவும் அவர் வாகனம் நிறைய நோயாளிகளை எல்லாவிடங்களிலுமிருந்து கொண்டு வந்தார். முப்பது பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றனர். பாருங்கள், அது சரியென்று அவர் உறுதி கொண்டார். எனவே அவர் மற்றவரைக் குறித்து அக்கறை கொண்டார். இயேசு சீக்கிரமாய் வரப்போகிறார் என்று நாம் உறுதி கொண்டிருப்போமானால், இழந்து போனவர்களைக் குறித்து நாம் அக்கறை கொண்டிருப்போம்.சுவிசேஷத்தை வெளியே அனுப்ப நம்மால் இயன்ற அனைத்தும் நாம் செய்வோம். 48 யாக்கோபு ஒரு இரவு முழுவதும் போராடினான் - அந்த போராடின பிரபு. அவன் இரவு முழுவதும் போராடினான். அவன் ஏசாவை இங்கும் அங்குமாக ஏமாற்றினான். ஏசா எதிர்கொண்டு வருகிறான் என்று அவன் கேள்விப்பட்டபோது, அவன் மரணத்துக்கேதுவான பயம் கொண்டு, தன் மனைவியை ஆற்றங்கரையில் விட்டுவிட்டு, மறுபுறம் சென்று முழங்கால்படியிட்டு விண்ணப்பம் பண்ணினான். தேவன் கீழே இறங்கிவந்து யாக்கோபைப் பற்றிக் கொண்டார், அவர்கள் இரவு முழுவதும் போராடினர். அவன் துவக்கத்தில் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கவில்லை, ஆனால் தேவன் அவனோடு போராடி முடிவதற்குள் அவன் உறுதி கொண்டான். ஆம், அவர் தேவன் என்று அவன் உறுதி கொள்ளும் வரைக்கும் அங்கு தங்கியிருந்து அவரைப் போகவிடாமல் பற்றிக் கொண்டான். அதன்பிறகு அவன் ஏசாவுக்கு பயப்படவில்லை. அவன் ஆற்றைக் கடந்தான். அவன் பலவீனமடைந்து, நொண்டி நடந்தான். அது அவனுடைய மோசமான நேரம் என்பது போல் தோன்றினது. அவன் மிகவும் பலவீனமடைந்திருந்தான். அவன் ஊனமுற்றிருந்தான். ஏசா அவனிடம், ''உனக்கு உதவி செய்ய என்னிடத்திலுள்ள ஜனங்களில் சிலரை உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா?'' என்று கேட்டான். யாக்கோபு, ''எனக்கு உதவி அவசியமில்லை'' என்றான். ஏன்? அவன் பற்றிக்கொண்ட தேவன் அவனைப் பாதுகாக்க வல்லவராயிருக்கிறார் என்று அவன் உறுதி கொண்டான். அல்லேலூயா ஜனங்கள் மாத்திரம் அவ்வாறு செய்தால்! 49 உன்னைப் பற்றிக்கொண்ட தேவன் உன் இருதயத்தை மாற்றி உன்னை கிறிஸ்து இயேசுவில் புது சிருஷ்டியாக்குவார் என்று உறுதிகொள். வியாதியோ, மரணமோ, எதுவானாலும் வரட்டும். அவர் முன் போலவே உன்னைப் பாதுகாப்பார் என்று உறுதி கொண்டிரு. ஆமென்! அது எனக்குப் பிரியம். அன்றிரவு நாம் சம்கார் என்பவனைக் குறித்து பேசினோம் (நியா. 3:31). அவன் தன் குடும்பத்தைக் குறித்து கவலை கொண் டான். ஆம், அவர்கள் பசியாயிருந்தனர் என்று அவன் அறிந்திருந்தான். பெலிஸ்தியரில் ஆயிரம் பேர் எழும்பிவந்தனர் - அறுநூறு பேர் என்று நினைக்கிறேன். அறுநூறு பேர் ஆயுதம் தரித்து பாதையில் வந்து கொண்டிருந்தனர். அவன் தன் குடும்பத்தைக் குறித்து அக்கறைக் கொண்டான். ஏனெனில் அவர்கள் குளிர்காலத்தில் பட்டினியால் சாவார்கள். அவன் அங்கு தங்கியிருந்து ஆழ்ந்துயோசித்து ஆராய்ந்து பார்த்தான். அவனால் என்ன செய்யமுடியும்? தேவன் தமது வாக்குத்தத்தத்தை காக்கிறவர் என்று அவன் உறுதி கொள்ளும்வரைக்கும் அங்கேயே தங்கியிருந்தான். 50 அவன் என்ன யோசித்திருப்பான் என்பதைக் கவனியுங்கள்: ''என் தகப்பன் ஆபிரகாம். அவனை விருத்தசேதனத்தின் மூலம் என் சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறேன். ஆபிரகாம் தேவனுடைய மனிதன் என்று நான் விசுவாசிக்கிறேன். அவன் உறுதி கொண்டதால், தேவனை சேவிக்க அவன் வீட்டையும் தனக்கிருந்த எல்லாவற்றையும் விட்டுப் புறப்பட்டான். அன்று மலையின் மேல் அவன் ஈசாக்குக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை பலி செலுத்தினபோது, தேவன் ஆபிரகாமிடம், “நீ இதை செய்தபடியால், உன் சந்ததியார் சத்துருக்களின் வாசலை சுதந்தரித்துக் கொள்வார்கள், என்று வாக்களித்தார் (அது உண்மை ). ஆபிரகாமே, உன் சந்ததியார் அப்படி செய்வார்கள் என்று நான் வாக்களித்து ஆணையிடுகிறேன் (அல்லேலூயா ஓ, என்னே, நான் பக்தி பரவசப்படுகிறேன்!) ஆபிரகாமே, உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசலை சுதந்தரித்துக் கொள்வார்கள்''. 51 அதை யோசித்துப் பார்த்த பின்பு சம்கார், ''நான் ஆபிரகாமின் சந்ததி - ஆமென்“ என்று சொல்லியிருப்பான். மாம்சப் பிரகாரமான சந்ததியாகிய சம்காரே அப்படி நினைக்க முடியுமானால், ராஜரீக சந்ததியாராகிய நாம் இன்றிரவு எவ்வாறு நினைக்க வேண்டும்! மகிமை! வ்யூ! எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டதென்று நினைக்கிறீர்களா? ஒருக்கால் இருக்கலாம். என்னைத் தனியே விட்டுவிடுங்கள். முன்பு எனக்கிருந்த சிந்தையைக் காட்டிலும் இந்நிலை எனக்கு மேலானதாக தோன்றுகிறது. ஆபிரகாமின் ராஜரீக சந்ததி! சபையானது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜரீக சந்ததி. மாம்சப்பிரகாரமான சந்ததியே அவ்வளவு தைரியம் கொண்டிருக்குமானால், பரிசுத்த ஆவியின் பிரசன்னம் சுற்றிலுமிருந்து அபிஷேகித்துக் கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ராஜரீக சந்ததி என்ன செய்யவேண்டும்? வ்யூ மகிமை! நிச்சயமாக. சம்கார், ''நான் ஆபிரகாமின் சந்ததி'' என்றான். அவன் அதைக் குறித்து சிந்தனை செய்தான். அவன் சந்ததியார் சத்துருக்களின் வாசலைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று தேவன் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். இதோ சத்துருக்கள் என் வாசலின் வழியாக அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்''. அவன் கையை நீட்டி ஒரு தாற்றுக் கோலை கையிலெடுத்தான். 52 அவன் நிற்கவில்லை. அவன் சண்டை செய்ய பயிற்சி பெற காத்திருக்கவில்லை. அவன், ''ஒரு நிமிடம் பொறு , நான் ஆபிரகாமின் சந்ததி. நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருக்கிறேன். இந்த பெலிஸ்தியர் சிறந்த வீரர்கள். அவர்கள் நீண்ட காலமாக சண்டையிடப் பழகினவர்கள். எனவே நான் வேதசாஸ்திர பள்ளிக்குச் சென்று என் டாக்டர் பட்டங்களைப் பெற்று, சண்டையிடக் கற்றுக் கொள்வேன். நான் ஸ்தாபன விதிகள் அனைத்தும் கற்றுக் கொள்வேன்“ என்று கூறவில்லை. அவன் அவ்வாறு செய்திருந்தால், அதை மட்டுமே அவன் அறிந்திருப்பான். அவர்களை அவன் முறியடித்திருக்க முடியாது. சத்துருவுக்கு ஈடாக அவன் இருந்திருக்க முடியாது. நீங்கள் சத்துருவுக்கு ஈடில்லை, நான் சத்துருவுக்கு ஈடில்லை. ஆனால் நான் வாக்குத்தத்தத்தின் கீழ் (அல்லேலூயா!) வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைவு கூருகிறேன்... சத்துருவின் வல்லமை ஏற்கனவே சந்திக்கப்பட்டு, ஜெயங்கொள்ளப்பட்டு, கீழே தள்ளப்பட்டுவிட்டது. நான் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவனாயிருக்கிறேன், இப்பொழுதே - நான் அல்ல. எனக்காக அவனை ஜெயங்கொண்ட அவருக்குள் நான் இருக்கிறேன். ஏனெனில் நான் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியில் பிறந்திருக்கிறேன். ஒரு நிமிடம் அதை சிந்தனை செய்து, பிறகு உங்கள் தாற்றுக்கோலை கையிலெடுத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் என்னும் பிசாசை உங்களை விட்டு விரட்டியடியுங்கள். அவன், ''நான்... நான் சண்டையிட கற்றுக்கொள்ள முடியாது'' என்றான். அவன் கற்றிருந்தால், அதை மாத்திரமே அவன் அறிந்திருப்பான். அதைக் குறித்து மாத்திரமே அவனால் பேசமுடியும். 53 இன்றைக்கு அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ''போதகராவதற்கு என் வாழ்க்கையில் ஒரு அழைப்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். உடனே தகப்பன், ''நல்லது மகனே, நான் பேராயரை தொலைபேசியில் கூப்பிட்டு, உன்னை வேத பள்ளியில் சேர்க்கமுடியுமா என்று பார்க்கிறேன். அங்கு நீ மனோதத்துவ பாடங்களையும் மற்றவைகளையும் கற்கலாம். நீ பத்து ஆண்டுகள் அங்கு கழித்தால், உன்னைத் தேர்ச்சி பெற்றவனாக செய்துவிடும் என்கிறார். நிச்சயமாக அது தேர்ச்சி பெறச் செய்யும். ஆனால் அவன் அதைக் காட்டிலும் அதிகம் அறிந்துகொள்ளாதபடிக்கு செய்துவிடும். ஆதி சபையில் அவர்கள் போதகரை அனுப்பினதற்கும் இன்றைக்கு அவர்கள் அனுப்புவதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அவர்கள் பத்து ஆண்டுகள் காத்திருக்கவில்லை, பத்து நாட்கள் மாத்திரமே காத்திருந்தனர். நீங்கள் உறுதிகொள்ள உங்களுக்கு பத்து ஆண்டுகள் பிடிக்குமானால் அவர்கள் பத்து நாட்களில் உறுதி கொண்டனர். ஆமென்! 54 நீங்கள் மனோதத்துவத்தை (Psychology) குறித்து ஒருக்கால் உறுதிகொள்ளலாம். ஆனால் முழங்கால்படியும் முறையை (Kneelology) நீங்கள் அறிய வேண்டும். பத்தே நாட்களில் அவர்கள் உறுதி கொண்டனர். அதன்பிறகு அவர்கள் மற்றவர்களைக் குறித்து அக்கறை கொண்டனர். அவர்களில் சிலர் கையொப்பமிடக் கூட அறந்திருக்கவில்லை. அவர்கள் படிப்பறியாதவர்கள் என்றும் பேதமையுள்ளவர்கள் என்றும் வேதம் கூறுகிறது. ஆனால் அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். அல்லேலூயா! எனக்குக் கல்வியைக் குறித்து கவலை கிடையாது. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இது பரிசுத்த ஆவி என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அவர் சுகமளிப்பவர் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அவர் இரட்சகர் என்று நான் உறுதிகொண்டிருக்கிறேன்! அவர் வரப்போகிறார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இதுதான் அது என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! நான் உறுதி கொண்டிருக்கிறேன் நான் விசுவாசிக்கிறேன். அவர்கள், ஏதோ ஒன்று நடந்தது என்று உறுதி கொண்டனர். அவர்கள் உறுதி கொண்ட பிறகு அக்கறை கொள்ளத்தொடங்கினர். மற்றவர்களுக்கு அவருடைய வார்த்தையை அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் அக்கறை கொண்டனர். அவர்கள் உறுதி கொண்டனர் என்பதற்கு அது நல்ல அடையாளம். அவர்கள் அக்கறை கொண்டனர். 55 அவர்கள் கல்வியைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. அவர்களால் ''ஆமென்'' என்று சொல்ல முடியுமா என்பதைக் குறித்தே அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். அது உண்மை . அவர்கள் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்திருந்தார்கள் என்றோ, அவர்களிடம் ஐக்கியச் சீட்டு உள்ளதா என்றோ அவர்கள் கவலை கொள்ளவில்லை. அவர்களுக்கு தேவை அனைத்தும் அவரே என்று அவர்கள் உறுதிகொண்டிருந்தனர்! இன்றிரவு நானும் அவ்வாறே இருக்கிறேன். நமக்கு தேவை அனைத்தும் கிறிஸ்துவே என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். நமக்கு புதிய நகராண்மைத் தலைவர் அவசியமில்லை; நமக்கு புதிய ஜனாதிபதிகள் அவசியமில்லை; நமக்கு புதிய சேனை அவசியமில்லை; நமக்கு புதிய அணுகுண்டு அவசியமில்லை; நமக்கு இயேசுவே அவசியம். அதைக்குறித்து மாத்திரமே அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். அவர்கள் இதையும் விசுவாசித்தனர். அவர்களுடைய தேவைகள் அனைத்தும் அவர் சந்திப்பார் என்று அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். அவ்வாறு நீங்களும் இன்றிரவு உறுதி கொண்டிருக்கிறீர்களா? 56 ''நான் உறுதி கொண்டிருக்கிறேன். எனக்கு முன்பாக என்ன எழுந்தாலும், அவர் எதிர்ப்பார். எனக்கு முன்பாக என்ன எழுந்தாலும், அவர் என்னைப் பாதுகாப்பார் என்று உறுதி கொண்டிருக்கிறேன். அவர் அப்படி செய்வதாக வாக்களித்துள்ளார். காலத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்'' என்று சொல்லுங்கள். அது உண்மை. இன்றைய நாளை குறித்து மாத்திரமே யோசியுங்கள். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால்; அவருக்கு தெரியாமல் ஒரு அடைக்கலான் குருவியும்கூட தெருவில் விழுந்து சாகாது. அப்படியிருக்க, எவ்வளவு அதிகமாக அவர் உங்கள் தேவைகளை அறிந்திருப்பார்? என்னைப் பொறுத்தவரையில் நான் உறுதி கொண்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான் காணிக்கைகளுக்காகவும் மற்றவைகளுக்காகவும் நான் கெஞ்சுவதில்லை. நான் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்தால், தேவன் என்னுடன் நிலைத்திருப்பார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அதை மற்றவர்கள் கொடுக்க வேண்டியதில்லை,அது தானாகவே வரும். நான்... நான் - உறுதி கொண்டிருக்கிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். அவர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். அதன்மேல் நான் உறுதி கொண்டிருக்கிறேன். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் சந்திப்பாரென்று உறுதி கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து நான் கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை 57 அவர்கள் மனோதத்துவ பாடங்களைப் படிக்கவேண்டிய அவசியமில்லையென்று உறுதி கொண்டிருந்தனர். அவர்கள் அதை மற்றவர்களுக்கு பிரசங்கிக்கும் போது - அவர்களுக்கு இருந்தது போதுமானது என்று அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். இன்றைக்குள்ள தொல்லை அதுவே. அவர்கள் கோட்பாடுகள், அப்படிப்பட்டவைகளை திணிக்க முயல்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் சரியென்று நீங்கள் சரியாக உறுதி கொள்ளவில்லை என்பதை அது காண்பிக்கின்றது. எனக்குத் தேவை அனைத்தும் பரிசுத்த ஆவியே. உங்களுடைய தேவையும் அதுவே. அதுவே எல்லோருடைய தேவையும். 58 அண்மையில் நான் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தேன். அவர்கள் அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு கல்வி கற்றுத்தர முயன்று கொண்டிருந்தனர். அவர்களை வெள்ளையர் மத்தியில் கொண்டுவரும்போது வெள்ளையருடைய பாவங்களையும் கற்றுக் கொள்கின்றனர். பழங்குடி மக்களுக்குத் தங்களுடைய பாவங்கள் வேறு உண்டு. அவனை வெள்ளையர் மத்தியில் கொண்டுவரும் போது, வெள்ளையரின் பாவங்களையும் கற்றுக்கொண்டு, அவன் துவக்கத்தில் இருந்ததைப் பார்க்கிலும் இரட்டிப்பாக நரகத்தின் பிள்ளையாகிவிடுகிறான். அவனுக்குத் தேவையானது ஒன்றே; அவனுக்கு கிறிஸ்து மாத்திரமே தேவை. ஆமென். 59 ஒருமுறை ஹட்சன் டெய்லர்... (சீனாவில் பெரிய மிஷனரியாக விளங்கிய அந்த ஹட்ஸன் டெய்லரைக் குறித்து எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?) ஒரு இளைஞன் இரட்சிக்கப்பட்டு தனக்கு ஊழியத்திற்கு அழைப்பு உள்ளதாக கூறினான். அவன் திரு. டெய்லரிடம் வந்து, “திரு டெய்லரே, நான் நான்கு ஆண்டுகள் மனோதத்துவம் பயில வேண்டுமா?'' (அவன் வேறென்னவெல்லாம் செய்யவேண்டுமென்று) ''என் முதல் பட்டத்தைப் பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்'' என்று கேட்டான். திரு. டெய்லர் அவனிடம், ''மகனே, நீ தொடங்குவதற்கு முன்பு மெழுகுவர்த்தியை பாதி எரித்துவிடாதே'' என்றார். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எரித்துவிடாதே - மெழுகுவர்த்தி பாதி எரியும்வரை காத்திருந்தால், ஒரு வகையான வேத பள்ளி படிப்பு உனக்குள் திணிக்கப்படுகிறது, ஒருவிதமான சவத்தைப் பாதுகாக்கும் தைலம். அப்படி செய்யாதே. மெழுகுவர்த்தியை ஏற்றினவுடனே, தொடங்கு. நான் அறியாமையை ஆதரிக்க முனையவில்லை, இதை நான் கூறமுற்படுகிறேன்: உனக்கு வேறொன்றும் தெரியாமலிருந்தால், மெழுகுவர்த்தி எப்படி ஏற்றப்பட்டதென்று அவர்களுக்கு சொல்; அவர்கள் எல்லோரும் அதை அறியவேண்டும். மெழுகு வர்த்தியை ஏற்றினது எது என்று அவர்களுக்கு சொல்; என்ன எரிந்து கொண்டிருக்கிறதென்று அவர்களுக்கு சொல். அது எப்படி ஏற்றப்பட்டதென்று அவர்களுக்குச் சொல். அவர்களும் ஏற்றப்படட்டும். அப்பொழுது அவர்கள் மற்றவைகளை கவனித்துக் கொள்வார்கள். நிச்சயமாக. உனக்கு தெரியாததும், உனக்கு தெரிந்த பின்பும் ஒரு உபயோகமுமிராத பெரிய பெரிய சொற்களை அவர்களிடம் கூறவேண்டாம். ''தேவனுக்கு மகிமை! பரிசுத்த ஆவி என்மேல் வந்தார். நான் இப்பொழுது வித்தியாசமான மனிதன்'' என்று மாத்திரம் அவர்களுக்குச் சொல்லுங்கள். மெழுகுவர்த்தி எப்படி ஏற்றப்பட்டது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். அது எரிந்து முடியும் வரைக்கும் காத்திருக்கவேண்டாம். அவர்கள் அநேகருக்கு இன்றைக்கு அது புகைந்து கொண்டிருக்கிறது. அது எப்படி ஏற்றப்பட்டது என்று மாத்திரம் அவர்களுக்குச் சொல்லுங்கள். 60 இயேசு பார்வையளித்த குருடன், ''இவ்வளவு வீண் சந்தடி எதற்கு?'' என்று கேட்டான். அவர் அந்த வழியாய் கடந்தபோது அவருடைய சீஷர்கள், ''இது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ?'' என்று கேட்டார்கள். இயேசு, ''அது இரண்டும் அல்ல. தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்'' என்று சொல்லி அவனுக்குப் பார்வையளித்தார். இதோ வேதபாரகர் பரிசேயர் அனைவரும் வந்தனர். அவனுடைய பெற்றோர் பயந்தனர். ஏனெனில் அவர்கள், ''எவனாவது நசரேயனாகிய இயேசுவை தீர்க்கதரிசியென்று அறிக்கையிட்டு அவர் சொல்வதற்கு செவிகொடுத்தால், ஒரு சீட்டு கொடுத்து அவனை சபைக்குப் புறம்பாக்குவோம் என்று ஏற்கனவே கூறியிருந்தனர். இதுவரைக்கும் அவர்கள் சிறிதளவும் மாறவில்லை. என் விஷயத்திலும் அவர்கள் அப்படித்தான் செய்தனர். “எவனாகிலும் அவருடைய கூட்டத்துக்குச் சென்று அவருக்கு செவி கொடுத்தால், அவனை சபையிலிருந்து புறம்பாக்குவோம்'' என்று இப்பொழுது அவர்கள் என் கூட்டங்களுக்கு வர தடை விதித்துள்ளனர். அவர்கள் உங்கள் பெயரை புத்தகத்திலிருந்து எடுத்துப் போடுவார்கள். 61 அவர்கள் அவனுடைய தாய் தகப்பன்மாரை அழைப்பித்து, “இது உங்கள் குமாரன்தானா?'' என்று கேட்டார்கள். அவர்கள், “ஆம், இவன்தான். இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்'' என்றனர். “இவன் எப்படி பார்வையடைந்தான்?'' இவனையே கேளுங்கள், “இவன் வயதுள்ளவனாயிருக்கிறான்'' அவர்கள் குருடனாயிருந்தவனை அழைத்து, ''நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவி'' என்றார்கள். அவனால் அவர்களுடன் வேதசாஸ்திரம் தர்க்கம் செய்ய முடியவில்லை. நிச்சயமாக முடியவில்லை. ஆனால் அவன் ஒன்று மாத்திரம் அறிந்திருந்தான். அவனால் காணமுடியும் என்று அவன் உறுதிகொண்டிருந்தான். அவன், ''அவர் பாவியோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. அவர் எந்த பள்ளியிலிருந்து வந்தார் என்பதைக் குறித்து எனக்கு ஒன்றும்தெரியாது. ஆனால் விவாதிக்க என்னிடம் ஒரு முக்கியமான விஷயம் உண்டு. நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் என்று உறுதியாய் அறிந்திருக்கிறேன். ஏனெனில் என்னால் காணமுடியும் என்று அவர் கூறினார். அவருக்கு நான் செவி கொடுத்தேன் என்றான்.'' அல்லேலூயா! நானும் அப்படித்தான்; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன் ஒரு காலத்தில் என்னால் இதை காண முடியவில்லை. நான் பாவியாயிருந்தேன். அவர் என் கண்களைத் திறந்தார். நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன். விவாதிக்க அவனுக்கு ஒரு முக்கிய விஷயம் இருந்தது. நிச்சயமாக இருந்தது. அவர்களால் அவனிடம் விவாதித்து வெல்ல முடியவில்லை. ஏன்? அவனால் காணமுடிகின்றது என்று அவன் உறுதி கொண்டிருந்தான்... அவன் “இது ஆச்சரியமான காரியம்... நீங்கள் இத்தேசத்தின் மதத் தலைவர்கள். அப்படியிருந்தும் அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாமலிருக்கிறீர்கள், என்று கூறுகின்றீர்கள். இதுவரை உலகத்தில் நடக்காத ஒரு அற்புதத்தை அவர் எனக்குச் செய்திருக்கிறார். இது ஆச்சரியமான காரியம்'' என்றான். சகோதரனே, அவன் அந்த விஷயத்தில் சிறந்த வேத பண்டிதனாக இருந்தான் என்று நம்புகிறேன். அவன் உறுதி கொண்டான், அவன் உறுதி கொள்ள அவனிடம் ஒன்று இருந்தது. அவன் குருடனாயிருந்தான். அவனால் காணமுடிந்தது. 62 தாவீது சவுலின் சேனைகளுடன் வருகிறான், கோலியாத் மறுபக்கம் நின்றுகொண்டிருந்தான்... தாவீது அவர்கள் எல்லாரைக் காட்டிலும் சிறு உருவம் படைத்தவனாயிருந்தான். கோலியாத் அவர்கள் எல்லோரிலும் மிகப்பெரிய உருவம் கொண்டவன். சவுல் கோலியாத்துக்கு ஈடாக இருந்திருப்பான். சவுல் ஏழு அடி உயரமாயிருந்தான். ஒருக்கால் எட்டு அடி உயரம் கூட இருந்திருக்கக்கூடும். அவனுடைய சேனையிலிருந்த எல்லோரைக் காட்டிலும் அவன் மிகவும் உயரமாயிருந்தான். தாவீதுதான் அங்கிருந்த எல்லோரிலும் மிகச்சிறிய உருவம் படைத்தவன். அவன் ஒருவன் மாத்திரமே சண்டையிட பழக்கமில்லாதவன். ஆனால் சகோதரனே, அவன் உறுதி கொண்டான். மகிமை! ''நான் குடித்தவனைப் போல் நடந்து கொள்கிறேன் என்று நீங்கள் கூறலாம்“ நான் அப்படித்தான்! கவனியுங்கள், சண்டை செய்ய அவன் பயிற்சி பெறாதவன். அவனிடம் ஈட்டி இல்லை. அவனுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. அவன் சிவப்பு மேனியுடைய சிறுவன். ஆனால் அவன் உறுதி கொண்டிருந்தான். அவன் “ஜீவனுள்ள தேவனுடைய சேனை'' என்று தங்களை அழைத்துக்கொண்ட சேனையின் மேல் அக்கறை கொண்டிருந்தான். அவனுடைய கவண் கல்லினால் சிங்கத்தையும் கரடியையும் கொன்றுபோட உதவி செய்த தேவன், விருத்தசேதனமில்லாத இந்த பெலிஸ்தியனை வழியிலிருந்து நீக்கிவிடுவார் என்று அவன் உறுதி கொண்டிருந்தான். அதன்பிறகு அவன் சேனையைக் குறித்து அக்கறைகொள்கிறான். அவனுக்கு எவ்வளவுதான்... நீங்கள் உறுதி கொண்டிருந்தால், அக்கறை கொள்வீர்கள். ஆனால் நீங்கள் முதலில் உறுதி கொள்ளவேண்டும். எனவே அவன் உறுதிகொண்டிருந்தான். 63 ஒரு உஷ்ணமான இரவில், சுற்றிலும் பிசாசு இருந்தான். அப்பொழுது தாவீது யுத்தத்துக்கு சென்றது எனக்கு ஞாபகம் வருகிறது. ஓ, எல்லாமே அவனுக்கு விரோதமாயிருந்தது. அவன் ஜெபம் செய்தான். அவன் முசுக்கட்டை செடியின் கீழ்பதுங்கியிருந்தான். எதிரிகளின் சேனை ஏற்கெனவே அவனைச் சந்திக்க ஆயத்தமாயிருந்தது. அவன் முசுக்கட்டை செடியின் கீழ் பதுங்கியிருந்தான். சற்று கழிந்து ஏதோ ஒன்று முசுக்கட்டை செடியின் வழியாய் கடந்து மறுபக்கம் செல்வதனால் உண்டான இரைச்சலைக் கேட்டான். சகோதரனே, அவன் உறுதி கொண்டான். எல்லாமே அவனுக்கு விரோதமாக இருந்தபோதிலும் அவன் கவலை கொள்ளவில்லை. கர்த்தர் அவனுக்கு முன்பாக புறப்பட்டு சென்றார் என்று அவன் உறுதி கொண்டான் (2. சாமு. 5:23-25). மனிதனே, உனக்கு என்ன கோளாறு இருந்தாலும் பரவாயில்லை. இன்றிரவு இங்கு நீ நின்றுகொண்டு பரிசுத்த ஆவியின் பலத்த காற்று உன்மேல் வருவதை உணர்ந்து, ''உன் நோய்களையெல்லாம் குணமாக்கும் கர்த்தர் நானே; உன்னை இப்பொழுதே குணமாக்குவேன்'' என்று கூறுவதைக் கேட்டு, நீ உறுதி கொள்வாயானால், சகோதரனே, வெளியில் என்ன கூறினாலும் நீ கவலை கொள்ளமாட்டாய், அது நிச்சயம் நடக்குமென்று ஏற்கனவே அறிந்திருப்பாய்! அவன் உறுதி கொண்டான், அதன்பிறகு அக்கறை கொண்டான். 64 சிம்சோன் தன் கையில் ஒரு கழுதையின் தாடை எலும்பை வைத்துக்கொண்டு பெலிஸ்தியரை எதிர்த்தான் -அவனிடம் ஆயுதம் எதுவுமில்லை. ஆனால் அவனை எழுப்பின தேவன் அந்த கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு இந்த பெலிஸ்தியரைக் கொல்ல வல்லவராயிருக்கிறார் என்று உறுதிகொண்டிருந்தான். அவன் ஆயிரம் பேரைக் கொன்றான். ஓடிப்போன தீர்க்கதரிசியாகிய மோசே - முட்செடியில் தோன்றினது தேவன் என்று மோசே உறுதி கொண்டபோது... அதற்கு முன்பு மோசேக்கு தேவனிடம் எந்த அனுபவமும் இல்லையென்று உங்களுக்குத் தெரியும். அவனிடம் நிறைய வேத சாஸ்திர அறிவு இருந்தது, ஆனால் அவன் ஓடிப்போனான். முட்செடியில் தோன்றினது தேவன் என்று அவன் உறுதிகொண்டபோது - ஏனெனில் புதரிலிருந்து ஒரு சத்தம் அவனுடன் பேசி வேத வாக்கியங்களை எடுத்துரைத்தது. அதன் காரணமாக அது தேவன் என்று அவன் உறுதி கொண்டான். தேவன், “நான் உன்னோடுகூட இருப்பேன்'' என்றார். எகிப்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரின் துயரத்தைக் குறித்து அவன் கொண்டிருந்த அக்கறை அனைத்தும் அவன் இழந்துவிட்டான். அவன் நாற்பது ஆண்டுகளாக எகிப்துக்கு வெளியே இருந்து, அவர்கள் அடிமைகளாயிருக்கும் படி விட்டுவிட்டான். ஆனால் அவர்களை விடுவிப்பது தேவனுடைய சித்தம் என்று அவன் உறுதி கொண்ட போது, அடுத்த நாள் முதற்கொண்டு அவன் அக்கறை கொள்ளத் தொடங்கினான். இதோ அவன் வழியில் சென்று கொண்டிருக்கிறான். அது எப்படிப்பட்ட காட்சி என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சிப்போராள் கழுதையின் மேல் உட்கார்ந்துகொண்டு, சிறு கெர்சோம் அவள் இடுப்பில் இருக்கிறான். அவனுடைய தாடி இப்படி தொங்கிக் கொண்டிருக்கிறது. எண்பது வயதான அவன் சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் வழுக்கை தலையுடன், கோணலான கோலைக் கையில் பிடித்தவனாய், ''அல்லேலூயா!'' என்று சத்தமிட்டுக் கொண்டு கடமையைச் செய்ய எகிப்துக்கு செல்கிறான். ஆம், அது உங்களை விசித்திரமாக நடந்து கொள்ளும்படி செய்யக் கூடும், அவனை விசித்திரமாக நடந்து கொள்ளும்படி செய்திருக்கக் கூடும், ஆனால் அவன் உறுதி கொண்டிருந்தான். ஏன்? ''மோசே, நான் உன்னோடு செல்கிறேன். உன் கையிலுள்ள கோலைக் கொண்டு என் ஜனங்களை விடுவிக்கப்போகிறேன்.'' ஒரு சிறு கோணலான கோல் ஒன்றும் பெரிதாக காணப்படவில்லை. ஆனால் சகோதரனே, அவன் உறுதி கொண்டிருந்தான். ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை அவனோடு கூடஇருந்தது. தேவனுடைய வார்த்தை உன்னோடும் உனக்குள்ளும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பாயானால், நீ உறுதி கொள்ள முடியும். 65 தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வார் என்று எபிரெய பிள்ளைகள் உறுதிகொண்டிருந்தனர். ஆம், அவர்கள் அதில் நிற்கும் வரைக்கும்... அவர்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக பணியக்கூடாது என்று தேவன் அவர்களிடம் கூறியிருந்தார். அவர் அந்த அர்த்தத்தில் தான் அதை கூறினார், அவர்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக பணிந்து கொள்ளாமல் இருந்தால், தேவன் தமது வார்த்தையைக் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் அப்படி செய்வாரென்று அவர்கள் உறுதி கொண்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையில் நிற்க வேண்டுமென்று உறுதி கொண்டபோது, தேவன் அவர்களுடன் நிற்க வேண்டுமென்று அக்கறை கொண்டார். இது தேவனுடைய வார்த்தையென்று நீங்கள் உறுதிகொள்ளும் போது, உங்களை கவனமாகப் பாதுகாக்க தேவன் அக்கறை கொண்டவராயிருக்கிறார். அதை நான் வெளிநாட்டு ஊழியங்களிலும் மற்றெல்லாவிடங்களிலும் பரிசோதித்து பார்த்திருக்கிறேன். அது உண்மையென்று நீங்கள் உறுதி கொள்ளும்போது - ஆனால் நீங்கள் உறுதி கொள்ளவேண்டும் - தேவன் உங்கள் மீது அக்கறை கொள்வார். ஆனால் முதலில் அது அவர் என்று நீங்கள் உறுதி கொள்ளவேண்டும். அப்பொழுது அவர் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொண்டு, அக்கறை கொள்வார். 66 இயேசு தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் தந்தருளுவாரென்று மரியாள் உறுதிகொண்டிருந்தாள். அவள், “யார் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. என் சகோதரி மரியாள் அதை விசுவாசிக்காவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. ரபீ என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. ஆனால் ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ, அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று உறுதி கொண்டிருக்கிறேன். அது நடக்கும். நான் போய் கல்லை உருட்டப் போகிறேன். அதை ஆயத்தப்படுத்தப்போகிறேன். ஏனெனில் நான் உறுதிகொண்டிருக்கிறேன்'' என்றாள். நிச்சயமாக, 67 அநேக ஆண்டுகளுக்கு முன்பு கென்டக்கியில் என் தகப்பனார்; பயிர்கள் தீய்ந்து போயின. பழைய காலத்து சுற்றி வரும் பிரசங்கி அங்கு வந்தார் - அவர் வயது சென்றவர். அவர் முழங்கால்படியிட்டால் ஏதாவதொன்று நடக்கும் வரைக்கும் முழங்காலிலேயே இருப்பார். அவர்கள் எல்லோரும் அன்று மழைக்காக ஜெபிக்க வேண்டுமென்று எண்ணினர். இந்த வயோதிபர் முழங்கால்படியிட்டு தளர்ந்த தம் கரங்களை மேலே உயர்த்தி, “ஓ தேவனே, உம்மை நான் சேவித்து வந்திருக்கிறேன். இந்த ஜனங்கள் உம்முடையவர்கள். அவர்களுடைய பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன'' என்று ஜெபித்தபோது, அப்பா சபை கட்டிடத்திலிருந்து மெல்ல நழுவிச்சென்று, கழுதையின் மேலிருந்த சேணத்தை அவிழ்த்து சபைக்கு கொண்டு வந்ததாக அவர் எங்களிடம் கூறினார். ஏனெனில் மழை வரப்போகிறது என்று அவர் அறிந்து கொண்டார். உறுதி கொண்டாரா? ஆம், ஐயா. அதன்பிறகு அவர் தமது சேணத்தின் மேல் அக்கறை கொண்டார். நீங்கள் உறுதி கொண்ட பிறகு... 68 மார்த்தாள், ''நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ, அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்' என்றாள். அது உண்மை. ''நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொண்டால், அது நடக்கும். அது மிகவும் அற்புதமான செயல் அல்லவா? யவீருவின் வீட்டில் சவம் கிடத்தப்பட்டிருந்தது. பன்னிரண்டு வயதுடைய அவனுடைய ஒரே மகள் மரித்துப்போனாள், “உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம்” என்னும் செய்தி அவனுக்குக் கிடைத்தது (லூக். 8:49). இயேசு சொன்னார்... முதலாவது, அவன் இயேசுவிடம், ''என் குமாரத்தி மரண அவஸ்தைபடுகிறாள். ஆனால் நான் உறுதி கொண்டிருக்கிறேன் (அல்லேலூயா!) நீர் வீட்டிற்கு வந்து அவள் மேல் கைகளை வைத்தால் அவள் பிழைப்பாள்'' என்றான். அவன் உறுதி கொண்டிருந்தானா? அவன் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருந்தான். அவருடைய வார்த்தையை அவன் அறிந்திருந்தான். அவன் தன் இருதயத்தில் இரகசிய விசுவாசியாயிருந்தான். அவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தான். அவர் தேவனுடைய குமாரன் என்று முற்றிலுமாக உறுதிகொண்டிருந்தான். 69 அதுவினோதமானது அல்லவா? அந்த விஷயத்துக்கு தேவன் அவனை வலுக்கட்டாயமாக கொண்டுவந்தார். உங்களை எப்படி வலுக்கட்டாயமாக கொண்டு வரவேண்டுமென்று தேவன் அறிந்திருக்கிறார். அது உண்மை. சில நேரங்களில் அவர், உங்களை வலுக்கட்டாயமாக கொண்டுவர, உங்களுக்கு வியாதியை அளிக்கிறார்- நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்ட. அவர் அவனை வலுக்கட்டாயப்படுதினார். அதை விசுவாசிக்க யவீரு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டான். அப்பொழுது அவன் யாரென்பதை வெளிகாட்டினான். “அவள் மரித்துப்போனாலும், நீர் வந்த அவள் மேல் கைகளை வைத்தால், அவள் பிழைப்பாள்” என்றான். ஓ, என்னே! அது எனக்குப் பிரியம். மார்த்தாளும் அதையே கூறினாள் என்று நினைக்கிறேன். இயேசுவும் அதைக் குறித்து உறுதிகொண்டார். 70 நூற்றுக்கு அதிபதியான அந்த ரோம் போர்ச்சேவகன், இயேசுவை மாத்திரம் ஒரு வார்த்தை கூறும்படி செய்தால் அவனுடைய வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று உறுதி கொண்டிருந்தான். அந்த ரோம போர்ச்சேவகன், புறஜாதி, அஞ்ஞானி கூறுவதைக் கேளுங்கள்: ''எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருண்டு. நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்'' என்றான் (மத். 8:9). ஏன்? அவன் அவர்களுக்கு மேல் அதிகாரமுள்ளவனாய் இருந்தான். அவன் எதை சாட்சியாக அறிவித்தான்? “இயேசுவே, நீர் எல்லா வியாதிகளுக்கு மேல் அதிகாரமுள்ளவர். நீர் மாத்திரம் ஒரு வார்த்தை சொல்லுவதை நான் கேட்டால், என் வேலைக்காரன் பிழைப்பான் என்று நான் முற்றிலுமாக உறுதி கொண்டிருக்கிறேன்”. இவை எல்லாவற்றிற்கு பிறகும் நாம் உறுதி கொள்ளுகிறதில்லை. பாருங்கள்? அது என்ன? அவன் விசுவாசம் பெரிது என்று இயேசு கூறினார். ''வார்த்தை மாத்திரம் சொல்லும் என்னும் விசுவாசத்தை அவர் இஸ்ரவேலருக்குள் காணவில்லை. 71 இதோ அது இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது: ''நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, நீ சொன்னபடியே நடக்கும் என்று உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீ சொன்னபடியே ஆகும்'' (மாற். 11:23-24). அப்படியானால் அறிக்கையிடுங்கள். எதை? “அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்; அவருடைய கிருபையினால் நான் இரட்சிக்கப்பட்டேன். அவருடைய வாக்குத்தத்தத்துக்கு கீழ்ப்படிந்து, பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவேன்'' பார்த்தீர்களா? அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் என்று நீ உறுதி கொண்டால்! ஆனால் முதலாவது நீ உறுதிகொள்ள வேண்டும் பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ உறுதி கொண்டாள். ரபீ என்ன கூறின போதிலும், ஆசாரியன் என்ன கூறின போதிலும், அவளுடைய புருஷன் என்ன கூறின போதிலும், வேறு யார் என்ன கூறின போதிலும், அவள், ''அவர் பரிசுத்த மனிதர். அவர் தேவனுடைய குமாரன். அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை நான் தொட்டால்! அதை மாத்திரமே நான் செய்யவேண்டும். அப்பொழுது நான் சொஸ்தமாவேன் என்று உறுதி கொண்டிருக்கிறேன்“ என்றாள். அவள் சுகமடையவேமாட்டாள் என்று மருத்துவர் கூறின போதிலும், ''அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டால் நான் சொஸ்தமாவேன்” என்றாள். அவள் உறுதி கொண்டிருந்தாள். 72 கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீ அவர் மேசியாவென்று உறுதி கொண்டாள். அவள் மேசியா எப்படியிருப்பார் என்னும் வேதப்பிரகாரமான அடையாளத்தைக் கண்டபோது... இன்று காலை நான் கூறின வண்ணமாக, அங்கிருந்த முன்குறிக்கப்பட்ட ஜீவன்; அவள் அதைக்கண்ட மாத்திரத்தில்; உலகத் தோற்றத்துக்கு முன்பாக தேவன் முன்குறிக்கப்பட்ட ஜீவ வார்த்தையின் மேல் ஒரு தண்ணீர் - இல்லை இரு தண்ணீர்கள் - ஊற்றப்படும்போது, அது உடனே அதை கண்டுகொள்கிறது. (சகோ. பிரன்ஹாம் விரலைச் சொடுக்குகிறார் - ஆசி). அங்கிருந்த ஊழியக்காரர் அதை கண்டுகொள்ளவில்லை, ஆசாரியர் அதைக் கண்டுகொள்ளவில்லை. பிரதான ஆசாரியர் அதைக் கண்டு கொள்ளவில்லை. பெரிய குருவானவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் அதை பிசாசு என்றழைத்தனர். ஆனால் அங்கிருந்த ஏழை வேசியை தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறித்தார். நீங்களும் முன்குறிக்கப்பட்டிருந்தால் அதை கண்டு கொள்வீர்கள். 73 கடைசி நாட்களில் அந்திகிறிஸ்து மிகவும் பக்தியுள்ளவனாக, உண்மையானதைப் போல் காணப்பட்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பான் என்று வேதம் கூறுகிறது. அவனால் வஞ்சிக்கமுடியாது! அது உண்மை... ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத அனைவரையும் அவன் மோசம் போக்குவான் - போன எழுப்புதலின்போதா பெயரெழுதப்பட்டது? வேதம் அப்படியா கூறுகிறது? இல்லை, உலகத்தோற்றத்துக்கு முன்பு. அவர்களை நீங்கள் வஞ்சிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் அந்த வார்த்தையிலேயே கிடக்கின்றனர். இவைகள் தோன்றுவதை அவர்கள் காணும் போது (சகோ. பிரன்ஹாம் விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசி), அது ஜீவன், அவர்கள் உடனே அதை கிரகித்துக் கொள்கின்றனர். மற்றவர் சுற்றி நடந்து வந்து, 'ஆ, அதில் ஒன்றுமில்லை'' என்பார்கள். பாருங்கள். அவர்கள் உறுதிகொள்ளவில்லை. அவர்களை உறுதி கொள்ளச் செய்ய அங்கு ஒன்றுமில்லை, அவர்கள் விசுவாசிக்க அங்கு ஒன்றுமில்லை. “சிவப்பு முள்ளங்கியில் இரத்தம் இல்லாத போது, அதிலிருந்து உனக்கு எப்படி இரத்தம் கிடைக்கும்?'' என்று என் தாயார் அடிக்கடி கூறுவதுண்டு, அது உண்மை . 74 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது'' (யோவான் 10:27). அவர்கள் வார்த்தையை அறிந்துள்ளனர். அவருடைய சத்தம் என்பது என்ன?இதோ இங்குள்ளது. அவைகள் கோட்பாடுகளுக்குப்பின் செல்வதில்லை, ஆனால் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கின்றன; அவைகள் அதற்குப்பின் செல்கின்றன. கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ முற்றிலுமாக உறுதி கொண்டிருந்தாள், அதன்பிறகு அவளுடைய ஜனங்களும் அந்த அடையாளத்தைக் கண்டு அதை விசுவாசிக்க வேண்டுமென்று அவள்அக்கறை கொண்டாள். அவர் மேசியாவென்று அவள் உறுதி கொண்டாள். ஏனெனில் அவர் அவளுக்கிருந்த தொல்லை என்னவென்று அவளிடம் எடுத்துக் கூறினார். அவள், ''ஐயா, மேசியா வரும் போது இதைச் செய்வார் என்று அறிந்திருக்கிறோம்'' என்றாள். அவர், ''நானே அவர்'' என்றார். இப்படிப்பட்ட காரியங்களைப் பேசுகிற மனிதன் நிச்சயம் உண்மையே கூறுவார் என்று அவள் அறிந்திருந்தாள். ஓ, என்னே! ஆம், அப்படிப்பட்ட விதத்தில் தேவன் உபயோகிக்கும் ஒரு மனிதன் பொய்யுரைக்க மாட்டார் அது உண்மை. அவர் உங்களிடம் உண்மையே கூறுவார். அவர், “நானே அவர்” என்றார். அந்த வார்த்தையின் மேல் வெளிச்சம் பட்டபோது, அவள் உணர்ச்சி மிகுந்தவளாய் ஊருக்குள்ளே ஓடினாள். அவள் முற்றிலும் உறுதி கொண்டாள் - அவள் அப்படிசெய்யவேண்டுமென்று கருதப்பட்டாலும் இல்லாவிட்டாலும். அவள் ஊருக்குள்ளே ஓடி ரபீகளிடமும், ஆசாரியர்களிடமும், தெருவில் சென்று கொண் டிருந்த மனிதர்களிடமும், அங்காடியிலுள்ள மனிதர்களிடமும், இப்படியாக ஒவ்வொருவரிடமும், “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். உங்கள் வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; உங்கள் சுருள்களைப் படித்து பாருங்கள். இவர் மேசியாவே என்பது உண்மை யல்லவா?'' என்றாள். அவள் உறுதி கொண்டாள். நியாயத்தீர்ப்பு நாளிலே அவள் எழுந்து நின்று அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் மேலும் இங்குள்ளவர்கள் மேலும் குற்றஞ் சுமத்துவாள். இயேசு, ''நியாயத்தீர்ப்பு நாளிலே தென் தேசத்து ராஜஸ்திரீ எழுந்து நின்று அவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள். ஏனெனில் அவள் சாலொமோனுக்கிருந்த ஞானத்தின் வரத்தைக் கேட்க வந்தாள் (சாலொமோனுக்கிருந்தது பகுத்தறிவின் வரம்). சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்'' என்று கூறினாரென்று உங்களுக்குத் தெரியும், நிச்சயமாக. ஆயினும் ஜனங்கள் அவரை விசுவாசிக்க மறுத்தனர். 75 அவள் உறுதி கொண்டாள். அவளுடைய ஜனங்களும் உறுதி கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். பாருங்கள், அவள் உறுதி கொண்ட பிறகு, அவளுடைய ஜனங்களைக் குறித்து அவள் அக்கறை கொண்டாள். அவர் மேசியாவென்று அவள் அறிந்துகொண்டாள். மேசியா வரும்போது அதுதான் நடக்குமென்று வேதம் கூறியுள்ளது என்று அவள் அறிந்திருந்தாள். அவள், ''கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும் போது இவை எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார். நீர் தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும்'' என்றாள். இயேசு, ''நானே அவர்“ என்றார். அங்கேயே அவள் உறுதி கொண்டாள். ஏனெனில் வேதம் அவ்வாறு கூறியிருந்தது, இதோஅது நிறைவேறினது. அவள் உறுதி கொண்டாள், அதன்பின்பு அக்கறைகொண்டாள். மற்றவர்களிடம் இதைக் கூற அவள் புறப்பட்டு சென்றாள். 76 இயேசு தாம் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்திருப்பார் என்று உறுதி கொண்டிருந்தார். அவர் உறுதி கொண்டிருந்தார். அவர், ''இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்றாம் நாளில் இதை எழுப்புவேன்'' என்றார். (யோவான் 2:19). ஏன்? வேதாகமத்தில் தாவீது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் - தாவீது தீர்க்கதரிசியென்று உங்களுக்குத் தெரியும், தாவீது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், ''அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காண வொட்டீர்“ என்று தீர்க்கதரிசனம் உரைத்தான் (சங். 16:10). எழுபத்திரெண்டு மணி நேரத்துக்குள் (அதாவது சரீரத்தில் அழிவு தொடங்குவதற்கு முன்பு) அவர் உயிரோடெழுந்திருப்பார் என்று அவர் அறிந்திருந்தார். எழுபத்திரெண்டு மணி நேரம் என்பது மூன்று பகல்களும் மூன்று இரவுகளும். அவர், ''இதை இடித்துப் போடுங்கள், இதை மறுபடிம் எழுப்புவேன்'' என்றார். முற்றிலுமாக உறுதி கொண்டிருந்தார். அது உண்மை . அதை அவர் மறுபடியும் எழுப்புவாரென்று. வேத வாக்கியங்கள் தவறாது என்று அவர் அறிந்திருந்தார். அல்லேலூயா! 77 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். இந்த ஊழியத்திலும் நான் பிரசங்கிக்கும் செய்தியிலும் நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது சத்தியம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். இந்த தரிசனங்கள் தேவனிடமிருந்து வருகின்றன என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். இப்பொழுது உங்கள் மேல் தங்கியுள்ள ஆவி பரிசுத்த ஆவி என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். மகிமை! நான் முற்றிலும் உறுதி கொண்டிருக்கிறேன்! பரிசுத்த ஆவியின் வழியே சரியென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! வேதாகமத்தின் வழியே சரியென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இங்கு இயேசு கிறிஸ்து இப்பொழுது இருக்கிறாரென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இந்நேரத்தில் அவரை நாம் விசுவாசிப்போமானால், இங்கு வியாதியாயுள்ள ஒவ்வொருவரையும் அவர் ஒரு நிமிஷத்தில், ஒரு இமைப்பொழுதில் சுகமாக்குவாரென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியை பொழிந்தருளி, ஜனங்கள் கூச்சலிட்டு, என்ன நடக்குமென்று கூறமுடியாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! 78 என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன் - எனக்கு வயதாகிவிட்டது என்பதனால் அல்ல. நான் இருபது வயது இளைஞனாயிருந்தபோதே இதைப் பிரசங்கித்திருக்கிறேன். அவர் என்னை நதியில் சந்தித்த அன்று முதற்கே நான் உறுதி கொண்டிருக்கிறேன். இந்த அக்கினி ஸ்தம்பம்... வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களோடு இருந்த அதே அக்கினி ஸ்தம்பம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! மகிமை! அது உண்மையென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன் அதற்காக என் ஜீவனையும் கொடுப்பேன். அதற்காக என் வீட்டையும் மற்றெல்லாவற்றையும் நான் விட்டேன்; அதற்காக எல்லாவற்றையும் நான் கொடுப்பேன்! இது சத்தியமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அவர் இங்குள்ளார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! இங்குள்ள ஆவி பரிசுத்த ஆவியென்று நான் உறுதிகொண்டிருக்கிறேன். இப்பொழுது அவருடைய ஆவிக்குள் நாம் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறோம் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது உண்மையென்று நானறிவேன். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கிறேன். 79 தூதன் என்னை அங்கு சந்தித்து அவர் என்ன செய்தாரென்று என்னிடம் கூறினார். நான் பல்லாயிரக்கணக்கான அஞ்ஞானிகளுக்கு முன்பாக நின்றேன். ''உங்களுக்கு பயமில்லையா?“ என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, ஐயா அது தேவனிடத்திலிருந்து வந்தது என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது வேதப் பூர்வமானது என்பதால் நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது கர்த்தருடைய தூதன் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்: அதை என் இருதயப் பூர்வமாக விசுவாசிக்கிறேன். நாம் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அவர் அதை நமக்குத் தந்தருளுவார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அவர் இங்கிருக்கிறார். பயப்படாதிருங்கள். அவர் இங்கிருக்கிறார். நமக்குள் அசைவாடுவதாக நீங்கள் உணரும் அந்த ஆவி பரிசுத்த ஆவியே என்று நான் உறுதிகொண்டிருக்கிறேன். அது கிறிஸ்து என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். ஆமென். இப்பொழுது நான் காணும் எனக்கு முன்னால் உள்ள அந்த வட்ட வடிவமான ஒளி பரிசுத்த ஆவி என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அந்த தரிசனம் என் கண்களுக்கு முன்னால் உள்ளதென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன்! அது உள்ளதென்று நானறிவேன். ஆமென்! இந்த நேரத்தில் உலகிலுள்ள எல்லா பிசாசுகளுக்கும் நான் சவால் விடுகிறேன். அவர் தேவன். கிறிஸ்து தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் தேவன். அவர் தேவனேயன்றி வேறல்ல. 80 இப்பொழுது சற்றுநேரம் நாம் தலைவணங்குவோம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்று நான் முழுவதுமாக உறுதி கொண்டிருக்கிறேன். பரலோகப் பிதாவே, அது நீரென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். தேவனே, இன்றிரவு நான் மேடையை விட்டுச் செல்லும் முன்பு நீர் விசேஷித்த ஒன்றை செய்யவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தினரை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம். உமக்கு சித்தமானதை எங்களுக்குச் செய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென். 81 ஏதோ ஒன்று நிகழ்ந்தது. தேவன் இங்கிருக்கிறார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அவன் ஜெப அட்டைகளை விநியோகம் செய்தானா? ஜெப அட்டைகள் ஏதாகிலும் உண்டா? இல்லை. அவை நமக்கு அவசியமில்லை. அவர் இங்கிருக்கிறார் என்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் முழுவதுமாக உறுதி கொண்டிருந்தால், ''இயேசுவே, என் பலவீனத்தோடு உம்மைத் தொடுகிறேன். சகோ. பிரான்ஹாம் சத்தியத்தை எடுத்துரைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் ஒரு மனிதன் மாத்திரமே, நீரோ தேவன். அது வார்த்தையாயிருப்பதால் அவர் சத்தியத்தை எடுத்துரைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, அது நிகழட்டும்.அவர் என்னிடம் பேசி, என்னிடமுள்ள கோளாறு என்னவென்று கூறட்டும். நான் உறுதி கொள்ளும்படி செய்யும்'' என்று கூறுங்கள். அவர் ஏற்கனவே கூட்டத்தில் இருக்கிறார். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ நரம்பு கோளாறுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் கூட உள்ள சிறுமிக்கு மூளை வளர்ச்சிக் குறைவு உள்ளது. நீ விசுவாசிக்கிறாயா? வீட்டில் வியாதியாயுள்ள தாய். சந்தேகப்படாமல் விசுவாசி! நீ கேட்டுக் கொள்வதைப் பெற்றுக்கொள்வாய். 82 மனித உருவில் வந்து, தன் முதுகை கூடாரப் பக்கம் திருப்பி, ஆபிரகாமுடன் பேசின அதே தூதன் தான் இன்றிரவு இங்கிருக்கிறாரென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். அது நிகழுமென்று அவர் வாக்களித்துள்ளார், அதே தூதன் நம்மை அபிஷேகிக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் அவர் தேவன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, சாராளே, இங்கு நீ எங்கோ இருக்கிறாய். நீ தேவனிடம் பேசு. சகோதரனே, சகோதரியே, இது சத்தியமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அது சத்தியம். எனக்குப் பின்னால் ஒரு ஸ்திரீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு இருதயக் கோளாறு உள்ளது. அவளை எனக்குத் தெரியாது. அவள் எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் நடுத்தர வயதுள்ளவள். அவள் இந்த இடத்தை சேர்ந்தவள் அல்ல. அவள் விர்ஜீனியாவிலிருந்து வந்திருக்கிறாள். திருமதி ஸ்டாக்ஸ், இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்குகிறார். அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அது... இது அவளுடைய வலது பாகம். விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும். 83 ஸ்திரீயே, இதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? நீயும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர் அல்லவா? நான் அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறாயா? உனக்கு தலையில் கோளாறு உள்ளது. அது உண்மை. உன் பெயர் திருமதி மூர். அது உண்மையானால், உன் கையையுயர்த்து. சுகமடைந்து வீட்டுக்குச் செல். நீ விசுவாசிக்கிறாயா? யாரோ ஒருத்தி எனக்கு முன்னால் இங்கு தோன்றினாள். இதோ அது. அது ஒரு ஸ்திரீ. அவளுக்கு மார்பகத்தில் புற்றுநோய். திருமதி. ரோட்ஸ், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. தேவன் அவளை அறிவார். நீ விசுவாசித்தால், எல்லாம் கூடும். அது உண்மை . ஒரு மனிதன் அங்கு உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் டுல்சாவை சேர்ந்தவர். திரு. ஹார்வுட், இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். குணமடைந்து வீடு செல்லுங்கள். அந்த மனிதனை எனக்குத் தெரியாது. அவரை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. நாங்கள் அந்நியர். அது உண்மை. ஏன்? அவர் ஏதோ ஒன்றை தொட்டார். நீங்கள் உறுதி கொண்டிருக்கிறீர்களா? தேவன் தம்முடைய வார்த்தையை காக்கிறவர்என்று உறுதி கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உறுதி கொண்டிருந்தால்... உங்களில் எத்தனை பேருக்கு தேவையுள்ளது? கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ எண்ணினது போன்று... இந்த ஜனங்களைக் கேளுங்கள்; அவர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசுங்கள் - நான் வேறொருவரைக் காண்கிறேன்; ஆம், வேறொருவர். கவனியுங்கள், அது சரியா இல்லையா என்று பாருங்கள். 84 அது கட்டிடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கட்டிடம் முழுவதும் - முழு இடமும் -அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் இங்குள்ள ஒவ்வொருவரையும் சுகமாக்குமென்று நான் உறுதி கொண்டிருக்கிறேன். நீங்களும் அவ்வாறே உறுதிகொண்டிருக்கிறீர்களா? தேவன் அதை உங்களுக்கு உறுதிபடுத்தித் தந்திருக்கிறாரா? அப்படியானால் நீங்கள் எழுந்து நின்று உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன். நீங்கள் உறுதி கொண்டால், உங்கள் கைகளை அவரிடம் உயர்த்தி அவருக்குத் துதி செலுத்துங்கள். பரலோகப் பிதாவே, சாத்தான் தோற்கடிக்கப்பட்டான் என்று அவர்கள் உறுதிகொள்ளும் வரைக்கும் பரிசுத்த ஆவி இந்த கட்டிடத்தை நிரப்புவாராக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானே, இந்த இடத்தை விட்டு வெளியேபோ. இது இயேசுகிறிஸ்து என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். அது நிச்சயம் நடக்கும். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.